Pages

Tuesday, May 31, 2011

அரிதான தீ நீர் வீழ்ச்சி

அமொரிக்காவில் கலிபோர்னியா நகரத்தில் உள்ள Y osemite National Park கில் இந்த தீ நீ்ர் வீழ்ச்சி உள்ளது. இங்குள்ள தீ நீர் வீழ்ச்சி மற்றும் பழமையான பைன் மரங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த நீர் வீழ்ச்சி சூரிய வெப்பத்தினால் உருவாகிறது. பிப்ரவரி மாதத்தின் கடைசி இரண்டு வாரங்கள் மட்டுமே இருக்கும் காலநிலைகளுக்கு ஏற்ப சில நேரங்களில் மட்டும் அரிதாகத்தான் இந்த தீ நீர் வீழ்ச்சி வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Monday, May 30, 2011

சர்வதேச விண்வெளி மையக் கட்டுமானம் நிறைவு பெற்றுள்ளது: நாளை எண்டவர் விண்கலம் பூமி திரும்புகிறது!

கடந்த 12 ஆண்டுகளாக நடந்து வந்த சர்வதே விண்வெளி மையத்தின் கட்டுமான பணி நேற்று முன்தினம் இறுதி கட்டத்தை எட்டியது. விண்வெளி ஆய்வுக்காக பூமிக்கு மேலே 355 கி.மீ. தொலைவில் சர்வதே விண்வெளி மையம் கட்டும் முயற்சியில் 16 நாடுகள் ஈடுபட்டன.

அமெரிக்க மற்றும் ரஷ்ய விண்கலங்களில் மாறி மாறி, பொருட்கள் மற்றும் விண்வெளி வீரர்கள் அனுப்பப்பட்டு சர்வதேச விண்வெளி மையம் அமைக்கும் பணி நடந்து வந்தது.

இந்த பணிகள் கடந்த 12 ஆண்டுகளாக தீவிரமாக நடந்து வந்தது. இதுவரை 4 லட்சத்து 55 ஆயிரம் கிலோ எடையுள்ள ஹார்டுவேர் பொருட்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் பொருத்தப்பட்டுள்ளன.

இறுதி கட்டமாக 15 மீட்டர் நீளமுள்ள ரோபோ கிரேன் பொருத்தும் பணியை எண்டவர் விண்கலத்தில் சென்ற விண்வெளி வீரர்கள் பின்கி மற்றும் சேமிடோப் ஆகியோர் நேற்று முன்தினம் முடித்தனர். இத்துடன் விண்வெளி மையத்தின் மொத்த கட்டுமான பணிகள் நிறைவடைந்துவிட்டன.

இத்தகவலை விண்வெளி மையத்திலிருந்து எண்டவர் விண்கல கமாண்டர் கெல்லி மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். சர்வதேச விண்வெளி மையத்தின் உள்கட்டமைப்பு தற்போது ஒரு போயிங் 747 ரக விமானம் அளவுக்கு பெரிதாக உள்ளது.

மின்உற்பத்திக்காக வெளிப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சோலார் தகடுகள் கால்பந்து மைதானம் அளவுக்கு பெரிதாக உள்ளது.

விண்வெளிமையத்தில் பணிகள் முடிந்து விட்டதால் எண்டவர் விண்கலம் நாளை பூமிக்கு புறப்படுகிறது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில், வரும் புதன்கிழமை எண்டவர் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடைசி பயணத்தை முடிக்கும் எண்டவர் விண்கலம் மியூசியத்துக்கு அனுப்பப்பட உள்ளது.

அதன்பின் அட்லான்டிஸ் விண்கலம் ஜூலை 8ம் தேதி தனது கடைசி விண்வெளி பயணத்தை தொடங்குகிறது. நாசாவின் அனைத்து விண்கலங்களும் இந்தாண்டு மியூசியத்துக்கு செல்கின்றன. புதிய மாடல் விண்கலங்களை உருவாக்கும் முயற்சியில் நாசா தீவிரமாக இறங்கியுள்ளது.

இந்த புதிய விண்கலம் விண்வெளி மையத்தின் சுற்றுவட்ட பாதையை தாண்டி வெகு தொலைவில் செல்லும் அளவுக்கு திறன்பெற்றதாக இருக்கும். அதுவரை ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் மூலம், நாசா வீரர்கள் விண்வெளி மையத்துக்கு சென்று வருவர்

சூரியனைச் சுற்றாத 10 மிதக்கும் கோள்கள் கண்டுபிடிப்பு!

விண்வெளியில் உள்ள கோள்கள் பொதுவாக ஏதாவது ஒரு சூரியனை சுற்றி வரும். ஆனால் அப்படி சூரியனை சுற்றாமல் தனியே மிதக்கும் 10 புதிய கோள்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

விண்வெளி ஆராய்ச்சியாளர் அயன்பாண்ட் தலைமையில் சர்வதேச விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அயன்பாண்ட் கூறியதாவது:
நட்சத்திர குடும்பத்தில் 10 புதிய மிதக்கும் கோள்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இவை வியாழன் கிரகத்தின் அளவுக்கு உள்ளன. பால் வெளி மண்டலத்தில் இத்தகைய கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதன்முறை. மாசே பல்கலைக்கழக கம்ப்யூட்டர் பிரிவு ஆராய்ச்சியாளர்கள் புதிய சாப்ட்வேர் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மேற்கொண்ட ஆய்வு மூலம் இவை கண்டறியப்பட்டுள்ளன.

இவை பூமியில் இருந்து சுமார் 25 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. வெறும் கண்ணால் புதிய கோள்களை பார்க்க முடியாது. இவை ஏதேனும் ஒரு சூரிய குடும்பத்தில் இருந்து தப்பித்து வந்த கோள்களாக இருக்கலாம்