Pages

Saturday, April 16, 2011

சுவிட்சர்லாந்தின் சில நகரங்களில் கூடுதலான வெப்பநிலை பதிவாகியுள்ளது














சுவிட்சர்லாந்தின் சில நகரங்களில் முன்னொரு போதும் இல்லாத வகையில் கூடுதலான வெப்பநிலை பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

19ம் நூற்றாண்டின் பின்னர் சுவிட்சர்லாந்தில் அண்மைய நாட்களாக அதிகளவு வெப்பநிலை காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.

லுகானோ, ரிக்கினோ ஆகிய கான்டன்களில் 30 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

லாகர்னோ கான்டனில் 31.8 பாகை செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

சில கான்டன்களில் இந்தக்கோடைக் காலம் மிகவும் வெப்பநிலை மிகுந்ததாகக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்கள புள்ளி விபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment