Pages

Tuesday, June 28, 2011

லண்டனில் சுற்றித் திரியும் வேற்றுகிரக வாசிகள்

வேற்றுகிரகத்தில் இருந்து பறந்து வரும் வினோத பொருட்கள் அடிக்கடி ஆச்சரியத்தை அளிப்பதுடன் பெரும் விவாதத்திற்கும் ஆளாகி வருகின்றன.
வேற்றுகிரக வாசிகளுக்கு கமெரா கூச்சம் இல்லை என மக்கள் பரவலாக பேசத் துவங்கி உள்ளனர். ஏனெனில் லண்டன் பி.பி.சி கட்டத்திற்கு மேல் யுஎப்ஓ எனப்படும் அடையாளம் காணப்படாத வினோத பொருள் பறந்தன.தெளிவான நீல வானத்தில் பறந்த அந்த வினோதப் பொருட்களை பார்த்ததும் வீதியில் நடந்து சென்ற இளைஞர்கள் தங்கள் கையில் இருந்த கைத்தொலைபேசி கமெராக்களில் அதை பதிவு செய்தனர்.
வானில் தோன்றிய அந்த வினோதப் பொருட்கள் சிறு புள்ளிகளாக கடுமையான வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தன. அந்த 3 வினோதப் புள்ளிகளும் முக்கோண வடிவில் விண்ணில் சீறி சென்றன.

இதில் ஒரு புள்ளி மிக நீளமானதாக இருந்தது. அதே நேரத்தில மிகுந்த ஒளிரும் தன்மையுடன் காணப்பட்டது. அந்த நீள நிற புள்ளி வட்ட வடிவில் மற்ற பொருளை விட மெதுவான வேகத்தில் சென்றது.

இந்த வினோத பொருள் மேற்கு லண்டன் வான் பகுதியில் பறந்தது குறித்து ஆச்சரிமான கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்றன. இந்த யுஎப்ஓ என்ன என்பதை விவரம் தெரிந்தவர்கள் விளக்க வேண்டும் என இளைஞர்கள் தங்கள் எதிரே வந்தவர்களிடம் கேள்விகளை கேட்ட வண்ணம் இருந்தனர். இந்த யுஎப்ஓ குறித்து இணையதள கருத்து பரிமாற்றத்திலும் கடுமையான விவாதம் காணப்பட்டது.

No comments:

Post a Comment