Pages

Friday, September 9, 2011

சூரியனை விட 8000 மடங்கு பிரகாசமாக தெரியக்கூடிய லேசர்கள் தயாரிப்பு

பூமியில் எங்குமே நம்மைச் சுற்றிலும் CD, DVD எல்லா இடங்களிலும் லேசர்க் கதிர்கள் காணப்படுகின்றன.
இது பெரும்பாலும் கதைகளில் வரும் விண்வெளி ஆயுதங்களில் தான் காணப்படும். இதில் Spider 3 Krypton தற்போது 85 மைல் தொலைவு வரையும் தெரியக்கூடியதாக உள்ளது.

இந்தவகை லேசர்தான் தற்போது கின்னஸ் பதிவுப் புத்தகத்தில் பூமியிலுள்ளவற்றில் மிகவும் பிரகாசமான, கையடக்கமான லேசராகப் பதியப்படப் போகின்றது. இது சூரியனை நேரடியாகப் பார்ப்பதைவிட 8,000 மடங்கு பிரகாசமாகக் காணப்படுகின்றது.
கிறிப்ரனின் அமெரிக்க உற்பத்தியாளர்கள் இதற்குப் பாதுகாப்புக் கண்ணாடிகளை அணியுமாறு கூறுகின்றனர். இத்துடன் இந்தப் பாதுகாப்புக் கண்ணாடியும் 299 டொலர் விலைக்குள் சேர்த்துக் கொடுக்கப்படுகின்றது.

இந்த லேசர் ஒரு கடதாசியை எரிக்கக்கூடியதாகும். இதில் அந்த லேசர் சூடாகமல் தடுக்க ஒரு மைக்ரோபுரொசெசரும் காணப்படுகின்றது.

Wicked Lasers என்ற இதன் உற்பத்தியாளர்கள் இதில் தேவையற்ற பாவனையைத் தடுக்கும் கடவுச்சொற்கள் காணப்படுவது போன்ற பாதுகாப்பு அமைப்புக்கள் உள்ளதென்றும் கூறுகின்றனர். அத்துடன் இவற்றை வாகனங்கள் மீதோ விமானிகள், மிருகங்கள் மற்றும் செய்மதிகளை நோக்கியோ காட்டக்கூடாதென்றும் எச்சரிக்கின்றனர்.

இதனை வான்நோக்கிக் காட்டும்போது செய்மதியிலுள்ள ஒருவர் இந்தப் பச்சைக் கதிரைப் பார்க்கக்கூடியவாறு பிரகாசமாக உள்ளது. இதனைப் பெரும்பாலும் இராணுவ, தொழில்சார் மற்றும் விஞ்ஞான ஆய்வுகளிலேயே பயன்படுத்துகின்றனர்.

இணையத்திலிருந்து பச்சை லேசரை ஒரு சிறுவன் வாங்கி அதனால் கண்களைக் குருடாக்கிய சம்பவம் 2010 இல் இடம்பெற்றதால் அதன்பின்னர் அவற்றைப் பயன்படுத்துவதற்கெதிராகப் பாதுகாப்பு நிறுவனங்கள் குரல்கொடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சக்திமிக்க லேசர் சுட்டிகளை விமானிகள், சாரதிகள் மற்றும் காற்பந்தாட்டக்காரர்களை நோக்கிச் செலுத்தியதற்காகப் பலர் பிரித்தானியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment