Pages

Thursday, April 23, 2015

சுற்றுவட்டப்பாதையில் வலைகளை பிண்ணி விண்கல பாகங்களை உருவாக்கும்


செவ்வாய் கிரகத்தில் ரோபோ சிலந்திகள் இருக்க வைக்கலாம் என்று டேவிட் போவி மூலம் கணிக்கப்பட்டது, ஆனால் உண்மையில் விண்வெளியில் இருந்து வலைகளை பிண்ணி மனிதர்களை சிவப்பு கிரகத்திற்கு கொண்டு செல்ல உதவுகிறது. டேதர் அன்லிமிடெட் என்ற நிறுவனம் ரோபோ சிலந்திகள் என்ற ஒரு அமைப்பை வெளியிட்டுள்ளது, அந்த ரோபோக்களால் சுற்றுவட்டப்பாதையில் சோலார் பேனல்கள், திரள்கட்டுகள்(trusses) மற்றும் விண்கலங்களின் மற்ற பகுதிகளை அமைக்க முடியும். சுற்றுவட்டப்பாதையில் இறுதி கட்டமைப்பை அனுமதிப்பதன் மூலம் விண்கலம் கட்டுமான செலவு பெருமளவில் குறைக்க முடியும் என்று நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது

எதிர்காலத்தின் புதிய அமைப்பான SpiderFab என்று அழைக்கப்படும் ரோபோ சிலந்திகள் டேதர் அன்லிமிடெட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு சிலந்திதேள் வகுப்பு போன்ற ரோபோக்கள் பயன்படுத்தி பூமியை சுற்றி அல்லது சூரியக் குடும்பத்தின் சுற்றுவட்டத்திற்குள் விண்கலத்திற்கு தேவைப்படும் பெரிய பொருள்களை கட்ட உதவி புரிகிறது. விண்வெளி அமைப்புகளில் இந்த செயல்முறையை செயல்படுத்தி, ஒரு சிறிய மற்றும் நிலைத்து நிற்கக்கூடிய 'எம்பிரியோனிக்' நிலை உருவாக்கப்படும்

ஒருமுறை சுற்றுவட்டப்பாதையில், தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்த அமைப்புகள் ஆண்டெனா, shrouds, பூம்ஸ், கான்சென்டிரேட்டர்ஸ் மற்றும் ஆப்டிக்ஸ் போன்ற பாகங்களை தானாகவே ஒருங்கிணைக்கும். உயர் தீர்மானம், உயர் அலைவரிசையை, அதிக சிக்னல்-க்கு-சத்தம், மற்றும் குறைந்த வாழ்க்கை சுழற்சி செலவு போன்ற தரவுகளின் பல்வேறு வகைகளில் பெறுவதற்கும் மற்றும் விநியோகிக்கவும் செயல்படுத்த முடியும் என்று நாசா தெரிவித்துள்ளது

தற்போதைய வழியில் உருவாக்கப்பட்ட விண்கலத்தில் குறைபாடுகள் உள்ளது என்று டாக்டர் ராபர்ட் ஹோட் கூறியுள்ளார். இந்த செயல்முறையினால் அதிகமான செலவு மற்றும் நேரத்தை எடுத்துக்கொள்ளும். மேலும், இந்த அமைப்புகளின் அளவு குறைவாக இருப்பதால் shroudக்குள் பாகங்களின் அளவை மடித்து வைத்து, பொருத்தி விண்வெளிக்கு அனுப்ப கடினமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.   

டேதர் அன்லிமிடெட் நிறுவனம், அடுத்த இரண்டு ஆண்டுகளில் SpiderFab ரோபோக்களை விண்வெளிக்கு அனுப்பி அதன் முதல் கட்டுமானப் பணி தொடங்கும் என்ற நம்பிக்கையில் உள்ளது

No comments:

Post a Comment