Pages

Thursday, April 23, 2015

விண்வெளிக்கு ஏவப்பட்ட சீனாவின் புதிய பெய்டோ நேவிகேஷன் சேட்டிலைட்

சீனாவில் திங்கட்கிழமை அன்று உள்நாட்டு பெய்டோ குளோபல் நேவிகேஷனுக்காகவும் மற்றும் நெட்வொர்கை சரியாக பொருத்துவதற்காகவும் ஒரு புதிய தலைமுறை செயற்கைக்கோளை விண்வெளிக்கு ஏவியது. தென் மேற்கு சீன மாகாணத்தில், சிச்சுவான் என்ற இடத்தில் உள்ள க்ஷிசங் செயற்க்கைக்கோள் வழி மையத்தில் இருந்து இந்த செயற்கைக்கோள் ஏவப்பட்டது. Long March-3C கேரியர் ராக்கெட் மூலம் உயர்த்தப்படுகிற இந்த செயற்கைக்கோளை, சீனாவின் வான்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கார்ப்பரேஷனால் உருவாக்கப்பட்டது என்று அரசு நடத்தும் சின்குவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது

இது பெய்டோ நேவிகேஷன் செயற்கைக்கோள் அமைப்பு (BeiDou Navigation Satellite System - BDS) இன் 17வது செயற்கைக்கோள் ஆகும். இந்த ஏவுதல் மண்டலத்தில் இருந்து உலகளாவிய கவரேஜ்க்கு பிடிஎஸ்- விரிவாக்கம் செய்கின்ற ஆரம்பத்தை குறிக்கிறது

இந்த சமீபத்திய செயற்கைக்கோள் புதிய வகையான நேவிகேஷன் சிக்னல்களை மற்றும் செயற்கைக்கோள்களுக்கு இடையேயான இணைப்புகளை சோதனை செய்து உலகளாவிய நெட்வொர்க் உருவாக்க ஒரு அடித்தளத்தை வழங்குகிறது என்று அறிக்கையில் தெரியவந்துள்ளது. ஒரு தன்னிச்சையான விமானத்தில் கேரியர் ராக்கெட்டில் நிறுவப்பட்டு, நடுத்தரத்தில் இருந்து உயர் சுற்றுவட்டப்பாதை வரை கோள்களை ஏவ ஒரு தொழில்நுட்பத்தை சீனா பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்

சுற்றுவட்டப்பாதையில் வலைகளை பிண்ணி விண்கல பாகங்களை உருவாக்கும்


செவ்வாய் கிரகத்தில் ரோபோ சிலந்திகள் இருக்க வைக்கலாம் என்று டேவிட் போவி மூலம் கணிக்கப்பட்டது, ஆனால் உண்மையில் விண்வெளியில் இருந்து வலைகளை பிண்ணி மனிதர்களை சிவப்பு கிரகத்திற்கு கொண்டு செல்ல உதவுகிறது. டேதர் அன்லிமிடெட் என்ற நிறுவனம் ரோபோ சிலந்திகள் என்ற ஒரு அமைப்பை வெளியிட்டுள்ளது, அந்த ரோபோக்களால் சுற்றுவட்டப்பாதையில் சோலார் பேனல்கள், திரள்கட்டுகள்(trusses) மற்றும் விண்கலங்களின் மற்ற பகுதிகளை அமைக்க முடியும். சுற்றுவட்டப்பாதையில் இறுதி கட்டமைப்பை அனுமதிப்பதன் மூலம் விண்கலம் கட்டுமான செலவு பெருமளவில் குறைக்க முடியும் என்று நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது

எதிர்காலத்தின் புதிய அமைப்பான SpiderFab என்று அழைக்கப்படும் ரோபோ சிலந்திகள் டேதர் அன்லிமிடெட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு சிலந்திதேள் வகுப்பு போன்ற ரோபோக்கள் பயன்படுத்தி பூமியை சுற்றி அல்லது சூரியக் குடும்பத்தின் சுற்றுவட்டத்திற்குள் விண்கலத்திற்கு தேவைப்படும் பெரிய பொருள்களை கட்ட உதவி புரிகிறது. விண்வெளி அமைப்புகளில் இந்த செயல்முறையை செயல்படுத்தி, ஒரு சிறிய மற்றும் நிலைத்து நிற்கக்கூடிய 'எம்பிரியோனிக்' நிலை உருவாக்கப்படும்

ஒருமுறை சுற்றுவட்டப்பாதையில், தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்த அமைப்புகள் ஆண்டெனா, shrouds, பூம்ஸ், கான்சென்டிரேட்டர்ஸ் மற்றும் ஆப்டிக்ஸ் போன்ற பாகங்களை தானாகவே ஒருங்கிணைக்கும். உயர் தீர்மானம், உயர் அலைவரிசையை, அதிக சிக்னல்-க்கு-சத்தம், மற்றும் குறைந்த வாழ்க்கை சுழற்சி செலவு போன்ற தரவுகளின் பல்வேறு வகைகளில் பெறுவதற்கும் மற்றும் விநியோகிக்கவும் செயல்படுத்த முடியும் என்று நாசா தெரிவித்துள்ளது

தற்போதைய வழியில் உருவாக்கப்பட்ட விண்கலத்தில் குறைபாடுகள் உள்ளது என்று டாக்டர் ராபர்ட் ஹோட் கூறியுள்ளார். இந்த செயல்முறையினால் அதிகமான செலவு மற்றும் நேரத்தை எடுத்துக்கொள்ளும். மேலும், இந்த அமைப்புகளின் அளவு குறைவாக இருப்பதால் shroudக்குள் பாகங்களின் அளவை மடித்து வைத்து, பொருத்தி விண்வெளிக்கு அனுப்ப கடினமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.   

டேதர் அன்லிமிடெட் நிறுவனம், அடுத்த இரண்டு ஆண்டுகளில் SpiderFab ரோபோக்களை விண்வெளிக்கு அனுப்பி அதன் முதல் கட்டுமானப் பணி தொடங்கும் என்ற நம்பிக்கையில் உள்ளது

Saturday, October 5, 2013

ஆழ்நிசப்த மண்டலத்தில் இந்தியாவின் இசை

36 ஆண்டு காலம் பயணம் செய்து நமது சூரியகுடும்பத்தைக் கடந்து அண்டவெளியில் நுழைந்துள்ள அமெரிக்காவின் வாயேஜர்-1 விண்கலம் அந்த ஆழ்நிசப்த மண்டலத்தில் இந்தியாவின் ஹிந்துஸ்தானி இசையை ஒலிhரப்பி உள்ளது

Friday, October 4, 2013

பூமிப்பந்தின் அழகிய புகைப்படம்

உருசியா நாட்டின் வானிலை ஆராய்ச்சி செய்மதியான Elektro-L ஆனது 36000 km உயரத்தில் இருந்து எமது பூமியை அரை மணிக்கு ஒரு தடவை புகைப்படம் எடுக்கின்றது. ஆனால் வருடத்திற்கு இரு தடைவைதான் பூமிப்பந்தின் இப்பாகம் பூராகவும் வெளிச்சமாக இருக்கின்றவாறான அழகிய புகைப்படம் கிடைக்கும்.

Thursday, October 3, 2013

Android Phone களுக்கு போடுகின்ற Lock எமது கணனியிலும்

Android Phone களுக்கு போடுகின்ற லொக்கை (Lock) எமது கணனியிலும் போடலாம். இந்த Lock ஆனது Android போன்களுக்கான lock ஆகும். அதிகமானோருக்கு இந்த Android Lock பற்றி தெரியும்.
ஆனால் கணனிகளுக்கு இவ்வாறான Lock போடுவது பற்றி அநேகமானோருக்கு தெரியாமல் இருக்கலாம்.
இந்த Lock இல் நிறைய விடயங்கள் இருக்கின்றன. அதை Settings பகுதியில் சரி செய்து கொள்ளலாம். இந்த lock இன் Password ஐ மூன்று தடவை தவறுதலாக கொடுத்ததால் Alarm ( அலாரம் ) அடிக்கும். ஒரு நிமிடத்தின் பின்னர் நின்றுவிடும்.
இதற்கு Key கொடுப்பது எளிது. Key கொடுக்க வேண்டிய இடத்தில் இரண்டு அல்லது மூன்று முறை தவறுதலாக கொடுங்கள் பின்னர் தானாக License Active ஆகிடும்.

Wednesday, October 2, 2013

Acer அறிமுகப்படுத்தும் தொடுதிரை மடிக்கணனி

கணனி வடிவமைப்பில் முன்னணியில் திகழும் நிறுவனங்களுள் ஒன்றான Acer தொடுதிரை தொழில்நுட்பத்துடன் கூடியதும், C720 Haswell Chromebook எனும் தொடரிலக்கத்தைக் கொண்டதுமான மடிக் கணனிகளை அறிமுகப்படுத்தவிருக்கின்றது.இவை Intel Celeron 2955U Haswell Processor, பிரதான நினைவகமாக 2GB அல்லது 4GB RAM ஆகியவற்றினைக் கொண்டுள்ளதுஇவற்றின் சேமிப்பு நினைவகமாக 16GB,32GB கொள்ளளவு காணப்படுகின்றது.மேலும் 3950mAh மின்கலத்தினைக் கொண்டுள்ள இக்கணனியின் ஏனைய  தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Friday, December 14, 2012

மாயன் கலண்டர் என்றால் என்ன?


கடந்த சில வருடங்களாக, மாயன் நாள்காட்டி 2012.12.21 ஆம் திகதி காலை மணி 11:11 அளவில் முடிவுக்கு வருவதை மேற்கோள் காட்டி உலகம் அழிவை நெருங்குகின்றது என்று இணையத்தளங்களும் திரைப்படங்களும் மக்களை பயமுறுத்தி வருகின்றன.

இதற்கு உறுதுணையாக உலகம் பூராவும் நடந்து வரும் காலநிலை மாற்றங்களும் இயற்கை சீற்றங்களும் வலம் வந்தன. மக்கள் உலக அழிவை நம்பினார்களோ இல்லையோ ஆனால் இந்த விடயம் பலரின் சாப்பாட்டு மேசைகளிலும், குடி களியாட்டங்களிலும் நல்லதொரு விவாதப் பொருளாகிவிட்டிருந்தது மறுக்க முடியாத விடயமாகும்.

மாயன் கலண்டர் என்றால் என்ன என்பது நிறையப் பேரிற்கு தெரிந்திருக்கும் ஆனால் தெரியாத சிலருக்காக இது தெரிந்தவர்கள் இதனை உருட்டி விடலாமே!

கிமு 2000 ஆண்டுகளுக்கு முன்பு தென் அமெரிக்காவில் மாயா என்ற ஓர் இனம் இருந்தது. 3500 ஆண்டுகள் வாழ்ந்த இந்த இனமானது கடந்த 15-ம் நூற்றாண்டில் அழிந்தது.

இந்த இனத்தினர் விஞ்ஞானிகளைவிடவும் புத்திசாலியாக வாழ்ந்ததாக சரித்திரச் சான்றுகள் கூறுகின்றன. மாயன் இனத்தவர் கட்டிடக் கலை, வான சாஸ்திரம், ஜோதிடம், அமானுஷ்யம், கணித சூத்திரம் போன்ற அனைத்துக் கலைகளிலும் தேர்ச்சி பெற்ற வித்தகர்களாக இருந்தனர்.

இன்றைக்கு இருப்பது போன்ற ஒரு நாட்காட்டியினை அவர்களும் வைத்திருந்தனர். இந்தக் காலண்டர் கிமு 313ல் தொடங்கியது. இதன்படி டிசம்பர் 2012ம் ஆண்டு 21ம் திகதியுடன் முடிவடைகிறது. அதாவது சூரிய மண்டலத்திற்கு 7நாள் என்பது பூமியைப் பொறுத்தவரை 25,625 வருடங்களாம்.

இதனை மாயன் காலண்டர் 5 கால கட்டங்களாகப் பிரிக்கிறது. ஒவ்வொரு கால கட்டமும் 5125 வருடங்களைக் கொண்டிருக்கிறது. இதன்படி 4 கால கட்டங்கள் முடிவடைந்து இப்போது 5வது காலகட்டம் நடந்துகொண்டிருக்கிறது. அந்த நாட்காட்டி 21.12.2012ல் முடிவடைகிறது.

அதன்படி 21.12.2012ல் உலகு அழியும் என்று ஒரு சாரார் நம்புகிறார்கள். மாயன் குறிப்புகளில் இருந்த பலவிடயங்கள் அவர்கள் கணித்த படி நடந்திருப்பதால் இதுவும் நடக்கலாம் என்பது பலரின் வாதம். ஆனால் மாயன் நாள்காட்டி முடியும் நாளில் உலகம் அழியும் என்று அவர்கள் ஓரிடத்திலும் குறிப்பிடப்படவில்லை.

உலக அழிவு கணிப்புக்கு துணையாக இணையத் தளங்களில் நிபிரு என்றொரு கிரகத்தின் உலகை நோக்கிய பயணம் விவாதிக்கப்பட்டது. சுமேரியர்களாள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் இக்கிரகம் உலகிற்கு அருகாமையில் வரும் பொழுது துருவ மாற்றம் நிகழும் என்றும் அதனால் பூமி சுழலும் அச்சின் சரிவு மாறி அதனால் பெரும் அழிவுகள் ஏற்படும் என்று எழுதப்படுகிறது.

இந்த நிபிரு கிரகத்தைப் பற்றி இணையங்களில் உலாவும் கதைகளின் சிறு தொகுப்பையும் தந்தால் தான் இணைய எழுத்தாளர்கள் பலர் ஹாலிவுட் படங்கள் வருவதற்கு எப்படி மூலகாரணமாக இருந்திருக்கிறார்கள் என்பது நமக்குப் புரியும்.

ஒவ்வொரு 3600 ஆண்டுகளுக்கும் ஒரு முறை நிபிரு நம்பூமியின் மிக அருகே வந்து செல்வதாகவும் அப்படி அக்காலத்தில் ஒரு முறை நம்பூமியருகே அக்கோள் வந்த போது அதிலிருந்து பூமிக்கு பறந்து வந்த அனுனாக்கி (Anunnaki) எனப்பட்ட அந்த கும்பல் அவர்கள் ஆதாயத்துக்காக நம் குரோமோசோம்களை சீண்டி அவர்கள் போலவே நம்மை மாற்றி அவர்களுக்கு நம்மை அடிமையாக்கிவிட்டு போய்விட்டார்கள்.

இந்தக்கதை ஈராக்கில் அன்று கோலோங்கியிருங்த சுமேரிய நாகரிகத்தில் கிடைத்த எச்சங்களில் இருந்து, அவர்களின் சுவடுகளில் கூறப்பட்டுள்ளது. (இது நம் இதிகாசங்களில் நாம் படித்த பறக்கும் ரதங்கள், வானிலிருந்து வந்த வானலோக தேவர்கள், விண்சேனைகள் கதைகளை நினைவு படுத்தவில்லையா?.)

1984-ஆம் ஆண்டு Infrared Astronomical Satellite-ன் உதவியோடு நாசா ஒரு செய்தியை வெளியிட்டது. 50 பில்லியன் மைல்கள் தொலைவிலிருந்து ஒரு மிகப்பெரிய மர்மபொருள் நம் பூமியை நோக்கி நெருங்கி வருவதாக. மீண்டும் 1992 -ஆம் ஆண்டு நாசா இன்னொரு செய்தியை வெளியிட்டது. 7 பில்லியன் மைல்கள் தொலைவிலிருந்து ஒரு கோள் நம் பூமியை நோக்கி நெருங்கி வருவதாக. அதாவது அந்த மர்ம PlanetX நம்மை இன்னும் கிட்ட நெருங்கியிருந்தது. இதற்கு அப்புறம் நாசா இதைப் பற்றி ஒரு மூச்சும் விடவில்லை. இதனை பலரும் புதுசாக கண்டுபிடிக்கப்பட்ட ஏரிஸ்(Eris) என்ற கோள்தான் அது என்கின்றனர்.

ஏரிஸ் எனப்படும் கோள் உண்மையாகவே இருப்பதாகவும் அது புளுடோ போல் ஒரு சிறிய கிரகம் என்றும் அது சூரியவெளிக்கு அப்பாலேயே தான் சுற்றும் என்றும் நாசா விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். இது பூமிக்கு மிக அருகில் வரக்கூடிய தூரம் சுமார் 4 பில்லியன் மைல்கள் என்றும் சொல்கிறார்கள்.

ஆனால் இன்னொரு கூட்டமோ இப்படி நாசாவின் டெலஸ்கோப்புகளில் காணப்பட்ட மர்மகோள் முன்பெல்லாம் பெரும் அழிவை உண்டாக்கிய “நிபிரு” தான் என்கின்றனர். அதன் போக்கை கண்காணிக்கவே அவசரமாக கொண்டு உலகின் மிகப்பெரிய South Pole Telescope-ப்பை நாசா தென் துருவத்தில் கொண்டு நிறுவியுள்ளதாம். உலக அளவில் இதுபதட்டத்தையும் மக்களிடையே பயத்தையும் ஏற்படுத்தும் என்பதால் நாசாவும் அரசும் இத்தகவலை மறைத்து வருகின்றது என்கின்றனர்.

எது எப்படி இருப்பினும் நமது உலகத்திற்கு அருகாமையில் இது வரைக்கும் எந்தக் கிரகமோ இல்லை எரிகற்களோ இல்லை என்று நாசா சொல்வதை நம்பலாம். ஏனென்றால் அப்படி ஏதாவது 2012.12.21 வருவதாக இருந்தால் வேறு யாராவது விண்வெளி கண்காணிப்பாளர் கண்ணிலாவது பட்டிருக்கும்.

சரி உலக அரசுகள் எல்லாம் சேர்ந்து இதை மறைக்கின்றன என்று நினைத்துக் கொண்டால் கூட நாம் இருக்கும் சில நாட்களை சந்தோஷமாகக் கழிக்கலாமே! இது வரையில் நாம் நம் மனச்சாட்சிக்கு மாறாக எதையாவது செய்திருந்தால் அதனை மாற்ற கிடைத்த சந்தர்ப்பமாகக் கருதி சரி செய்யலாமே! உலகம் அழியாவிட்டால் கூட இது நமக்கு நல்லதொரு ஆரம்பமாகட்டுமே!

ஆனால் ஓன்று மட்டும் உண்மை. உலகம் அழிய நிபிறு எல்லாம் தேவையில்லை. நாங்கள் அதற்கு செய்து வரும் இறுதிச் சடங்குகளே போதும். அது தானாகவே அழிந்துவிடும் காலம் அதி தொலைவிலில்லை.