Pages

Thursday, December 8, 2011

பூமியைப் போன்றே புதிய கிரகம் கண்டுபிடிப்பு

சுமார் 600 லட்சம் கோடி கி.மீ. தூரத்தில் பூமி போலவே ஒரு கிரகம் இருப்பதை நாசாவின் கெப்ளர் விண்கலம் கண்டுபிடித்துள்ளது.
அண்டவெளியில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற வகையில் வேறு ஏதும் கிரகங்கள் இருக்கிறதா என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்தின்(நாசா) கெப்ளர் விண்கலம் ஆராய்ச்சி செய்து வருகிறது.

வெகு தொலைவில் ஒரு நட்சத்திரத்தை சுற்றும் கிரகம் ஒன்று ஏறக்குறைய பூமி போலவே இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு தெரியவந்தது.

அதில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு இருப்பதை விஞ்ஞானிகள் தற்போது உறுதி செய்துள்ளனர். இதுபற்றி அவர்கள் கூறியதாவது: சுமார் 600 லட்சம் கோடி கி.மீ. தூரத்தில் பூமி போலவே ஒரு கிரகம் இருப்பதை கெப்ளரில் இருக்கும் நவீன கமெராக்கள் உறுதி செய்துள்ளன.

சூரியன் போன்ற நட்சத்திரம் ஒன்றை அந்த கிரகம் பாதுகாப்பான தொலைவில் சுற்றி வருகிறது. அதன் வெப்பநிலை உட்பட பல அம்சங்களை பார்க்கும் போது உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு இருப்பதாகவே தெரிகிறது.

கெப்ளர் 22பி என்று அதற்கு பெயரிடப்பட்டுள்ளது. அது பூமியைவிட சுமார் 2.4 மடங்கு பெரிதாக இருக்கலாம் என்று தெரிகிறது

Sunday, October 30, 2011

The Planet Jupiter

The Planet Jupiter is the LARGEST PLANET in our Solar System. Jupiter has at least 63 moons and they include: Europa, Io, Callisto and Ganymede.

Jupiter was explored in flybys in the 1970s by NASA's Pioneer 10 and 11 and Voyager 1 and 2 spacecraft, and is currently being studied by the Galileo spacecraft.

Facts about Planet Jupiter

* Diameter: 85,788 miles the largest planet - more than 12 Earths could line up across it

* Temperature: Range -163° C to >-121° C

* Distance from Sun: Approximately 466 million miles

* Atmosphere: Mostly hydrogen and helium

* Surface: A giant ball of mostly hydrogen and helium

* Rotation of its axis: 9 hours, 55 minutes in Earth time (the length of one rotation)

* Rotation around the Sun: 12 Earth years

* Magnetic Field: Yes

* Number of Moons: 63 moons have been identified Ganymede is the largest moon - it is bigger than both Mercury and Pluto

Saturday, October 29, 2011

இன்றைய தினத்தில் வியாழன் கிரகத்தை காணலாம்

இது வேகமாக சுற்றும் மிகப் பெரிய கிரகம் ஆகும். பூமியைப் போலவே ஒரு நீள் வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வரும் வியாழன், இன்று பூமி, சூரியன் ஆகியற்றுடன் இன்று முதல் நேர் கோட்டில் பூமிக்கு மிகவும் அருகில் வருகிறது.

எனவே, இன்று முதல் மாலை சூரியன் மறைந்ததும், கிழக்கு வானில் மிகுந்த ஒளியுடன் வியாழன் திகழ்வதைப் பார்க்கலாம். இதன் பிறகு இப்படிபட்ட காட்சியை 2022இல் தான் பார்க்க முடியும்.

அந்த அளவிற்கு வியாழன் பிரகாசமாக காட்சியளிக்கும். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 20ஆம் திகதி முதல் இவ்வாறு பூமிக்கு மிக நெருக்கமாக வியாழன் காட்சியளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, October 28, 2011

2000 ஆண்டுகளுக்கு பின்னர் சுபநோவாக்கள் விஞ்ஞானிகளால் கண்டுபிடிப்பு

2000 வருடங்களுக்கு முன்னர் மனிதனால் கண்டு பிடிக்கப்பட்ட சுபனோவாக்கள் வானில் பறந்து செல்வதற்கான புதிரை தற்போதுதான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.

கி.பி 185ல் சீன வானியல் ஆய்வாளர்களினால் சடுதியாக கண்டுபிடிக்கப்பட்ட சுபநோவா எட்டு மாதங்கள் இருந்துவிட்டு மறைந்துவிட்டதென வானியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது வெடித்த நட்சத்திரத்தையே சுபநோவா என்றழைக்கப்படுகிறது. நட்சத்திரம் கூடிய அமுக்கத்தினால் குறுகி பின்னர் தனது சூழலிலுள்ள அனைத்துப் பொருட்களையும் விழுங்கும் குள்ளனாக மாறி பின்னர் அதிக அமுக்கத்தினால் வெடித்துச் சிதறியே சுபநோவாக மாறும் என பௌதிகவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

1960 இல் ஆர்சிடப்ளிவ் 86 என்றழைக்கப்பட்ட சுபநோவா முதன் முதலில் பதியப்பட்ட தகவல்கள் மூலம் விஞ்ஞானிகளால் தீர்மானிக்கப்பட்ட சுபநோவாகும்.

இந்தச் சுபநோவா வெடித்துச் சிறியமை விஞ்ஞானிகளால் எதிர்பார்க்கப்பட்டது. இது 8000 ஒளியாண்டு தொலைவில் இருக்கும்போது கண்டுபிடிக்கப்பட்டது.

ஒரு ஒளியாண்டு 6000 பில்லியன் கிலோமீற்றர்களாகும். இன்றுவரை வெடித்த சுபநோவாக்கள் வானில் பறந்து செல்வதற்கான புதிரை விஞ்ஞானிகள் தற்போதுதான் கண்டுபிடித்துள்ளார்கள்.

இன்றிலிருந்து பூமிக்கு அருகாக வரப் போகும் வியாழன் கோள்

சூரியனைச் சுற்றி வர பூமிக்கு ஆகும் காலம் 365 நாட்கள். பூமியில் இருந்து 59.2 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வியாழன் கிரகம் சூரியனைச் சுற்றி வர 393 நாட்களை எடுத்துக்கொள்கிறது.

இது வேகமாக சுற்றும் மிகப் பெரிய கிரகம் ஆகும். பூமியைப் போலவே ஒரு நீள் வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வரும் வியாழன், இன்று பூமி, சூரியன் ஆகியற்றுடன் இன்று முதல் நேர் கோட்டில் பூமிக்கு மிகவும் அருகில் வருகிறது.

எனவே, இன்று முதல் மாலை சூரியன் மறைந்ததும், கிழக்கு வானில் மிகுந்த ஒளியுடன் வியாழன் திகழ்வதைப் பார்க்கலாம். இதன் பிறகு இப்படி ஒரு காட்சியை 2022இல் தான் பார்க்க முடியும்.

அந்த அளவிற்கு வியாழன் பிரகாசமாக காட்சியளிக்கும். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி முதல் இவ்வாறு பூமிக்கு மிக நெருக்கமாக வியாழன் காட்சியளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, October 27, 2011

உலகின் வினோதங்கள்

ஏராளமான உயிரினங்களின் சரணாலயமாக திகழும் பிரேசிலின் அமேசன் காட்டில் நடந்த ஒரு சம்பவம் அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.

அமேசன் காட்டுக்குச் சென்ற பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணிகளால் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றில் தான் குறித்த காட்சிகள் பதிவாகியுள்ளன.


கமராவின் முன்னாள் சிறுவர்கள் இருக்கிறார்கள் அதன் பின்னால் ஒரு உருவம் தெரிகிறது. அதன் பக்கத்தில் ஒளிவட்டமும் தெரிகிறது.
வேற்றுக்கிரக வாசிகளாக இருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

குறித்த காட்சிகள் தொடர்பாக பிரேசில் அரசு விசாரணை மேற்கொண்டு வருகின்றது.

Monday, September 19, 2011

சிறிய கோள்களில் காணப்படும் பாரிய கறுப்பு ஓட்டைகள்: ஆய்வாளர்கள் தகவல்

நமது பூமியிலிருந்து சிறிய தொலைவில் உள்ள பால்வீதி மண்டலத்தில் பெரும் திறள் கருப்பு ஓட்டைகள் இருப்பதை விண்வெளி ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

தொலைதூர பிரபஞ்சத்தை ஆய்வு செய்வதற்காக ஹப்பில் விண்வெளி நுண்ணோக்கியை பயன்படுத்தி ஆய்வாளர்கள் ஆய்வு செய்த போது சிறிய நட்சத்திர கூட்டங்களில் பெரிய கருப்பு ஓட்டைகள் வளர்வதை கண்டறிந்தார்கள்.

சிறிய பால்வீதி மண்டலத்தின் புதிய பரிணாமத்தின் போது மத்திய கருப்பு ஓட்டைகள் உருவானதைக் கண்டறிந்தனர். இந்த ஆய்வின் மூலம் மிகச் சிறிய அடர்த்தி உள்ள நட்சத்திர கூட்டங்களிலும் மிக பெரிய கருப்பு ஓட்டைகள் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் முடிவுக்கு வந்தனர்.

அனைத்து பெரும் பால்வீதி மண்டலங்களிலும் ஒரு மைய பெரிய கருப்பு ஓட்டைக் காணப்படுகிறது. அது மிகவும் வெளிச்சம் மிக்கதாக இருக்கிறது. இந்த ஆய்வினை டிரம்ப் மற்றும் இணை ஆய்வாளர்கள் மேற்கொண்டனர். இந்த ஆய்வுப் பகுதி 1000 கோடி ஒளி ஆண்டுகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் நடைபெற்று உள்ளது.

நாங்கள் 1000 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் பிரபஞ்சத்தினுடைய இளம் காலத்தை பார்வையிட்டோம். அப்போது இந்த மிகச் சிறிய இள நட்சத்திரக் கூட்டங்களைக் காண முடிந்தது என டிரம்ப் தெரிவித்தார்.

சிறிய கோள்களில் காணப்படும் பாரிய கறுப்பு ஓட்டைகள்: ஆய்வாளர்கள் தகவல்

நமது வான்பகுதியில் பால்வீதி மண்டலம் எனப்படும் நட்சத்திர கூட்டங்கள் அதிகளவில் உள்ளன.

நமது பூமியிலிருந்து சிறிய தொலைவில் உள்ள பால்வீதி மண்டலத்தில் பெரும் திறள் கருப்பு ஓட்டைகள் இருப்பதை விண்வெளி ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

தொலைதூர பிரபஞ்சத்தை ஆய்வு செய்வதற்காக ஹப்பில் விண்வெளி நுண்ணோக்கியை பயன்படுத்தி ஆய்வாளர்கள் ஆய்வு செய்த போது சிறிய நட்சத்திர கூட்டங்களில் பெரிய கருப்பு ஓட்டைகள் வளர்வதை கண்டறிந்தார்கள்.

சிறிய பால்வீதி மண்டலத்தின் புதிய பரிணாமத்தின் போது மத்திய கருப்பு ஓட்டைகள் உருவானதைக் கண்டறிந்தனர். இந்த ஆய்வின் மூலம் மிகச் சிறிய அடர்த்தி உள்ள நட்சத்திர கூட்டங்களிலும் மிக பெரிய கருப்பு ஓட்டைகள் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் முடிவுக்கு வந்தனர்.

அனைத்து பெரும் பால்வீதி மண்டலங்களிலும் ஒரு மைய பெரிய கருப்பு ஓட்டைக் காணப்படுகிறது. அது மிகவும் வெளிச்சம் மிக்கதாக இருக்கிறது. இந்த ஆய்வினை டிரம்ப் மற்றும் இணை ஆய்வாளர்கள் மேற்கொண்டனர். இந்த ஆய்வுப் பகுதி 1000 கோடி ஒளி ஆண்டுகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் நடைபெற்று உள்ளது.

நாங்கள் 1000 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் பிரபஞ்சத்தினுடைய இளம் காலத்தை பார்வையிட்டோம். அப்போது இந்த மிகச் சிறிய இள நட்சத்திரக் கூட்டங்களைக் காண முடிந்தது என டிரம்ப் தெரிவித்தார்.

Saturday, September 17, 2011

‘Star Wars’ அறிவியல் கதைகள் உண்மையாகின்றனவா?

Star Wars படத்தில் இரு சூரியன்களுடன் வரும் கோளைப் போன்ற அசாதாரணமான கோள்களை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தத் திரைப்படம் வெளிவந்து 30 வருடங்களின் பின்னர் உண்மை வாழ்க்கையில் இந்தக் கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

உறையும் குளிரைக் கொண்ட Kepler-16b என்று பெயரிடப்பட்ட கோளானது சனியின் பருமனை ஒத்ததாகவும் 200 ஒளியாண்டுகளுக்கு அப்பாலும் உள்ளது.

நாசாவின் Kepler விண்கலத்தினால் இந்தக் கோள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கோளில் நாளாந்தாம் மாலையில் இரு சூரியன்கள் மறைகின்றன.

இதிலுள்ள இன்னொரு விடயம் என்னவென்றால் இங்கு 3 கிரகணங்கள் இடம்பெறுகின்றன.

Friday, September 16, 2011

புளூட்டோ

சூரிய மண்டலத்தின் நெப்ட்யூனுக்கு அப்பால் சுற்றிவரும் ஒரு குறுங்கிரகம் புளூட்டோ (Pluto). இது நெப்ட்யூனுக்கு அப்பால் உள்ள கைப்பர் பட்டையில் உள்ளது. இது சூரியனைச் சுற்றிவர 248 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது. 1930 - ஆம் ஆண்டு கிளைடு டோமபோ என்பவரால் புளூட்டோ கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் கிரகமாக கருதப்பட்ட புளூட்டோ 2006 ஆகஸ்ட் 24 - ஆம் நாளன்று சர்வதேச விண்வெளியியல் கூட்டமைப்பு கிரகங்களுக்கான இலக்கணத்தை முடிவு செய்தபின் குறுங்கிரகமாக அறிவிக்கப்பட்டது. இதில் நைட்ரஜன் 90 சதவிகிதமும், மீத்தேன் 10 சதவிகிதமும் உள்ளன. இதற்கு சாரோன் என்ற ஒரு துணைக்கிரகம் உள்ளது.

Thursday, September 15, 2011

பூமியை போன்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு

ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த விண்வெளி விஞ்ஞானிகள் கிரகங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அதிநவீன டெலஸ் கோப் மூலம் விண்வெளியில் ஆய்வு நடத்திய போது பூமியை போன்று மற்றொரு புதிய கிரகம் இருப்பதை கண்டுபிடித்தனர். இது பூமியை விட 3.6 மடங்கு பெரியது. இதை சுற்றி விண்மீன்(நட்சத்திரங்கள்) கூட்டம் உள்ளது.

அதற்கு எச்.டி.85512 பி என பெயரிட்டுள்ளனர். இந்த கிரகம் பூமியில் இருந்து 36 வெளிச்ச ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. இதன் வலது புறம் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. எனவே இங்கு உயிர்கள் வாழ முடியும் என கருதப்படுகிறது. மேலும் இந்த புதிய கிரகத்தின் வெளிப்புற தோற்றம் பாறை போன்று காட்சி அளிக்கிறது.

மேகக் கூட்டங்களும் காணப்படுகிறது. ஆகவே இங்கு உயிர் வாழ முடியும் என கருதப்பட்டாலும் கூட தீவிர ஆய்வுக்கு பிறகே இறுதியான முடிவுக்கு வரமுடியும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

Sunday, September 11, 2011

ஆராய்சி செய்தி சந்திரனை முழுமையாக ஆராயும் செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்ப நாசா திட்டம்

சந்திரனுக்கு அமெரிக்கா முதன் முதலாக மனிதனை அனுப்பியது. தற்போது அங்கு முழுமையாக ஆராய்ச்சி நடத்த நாசா மையம் திட்டமிட்டுள்ளது.

சந்திரனின் புவிஈர்ப்பு தன்மை மற்றும் அதன் அமைப்பு குறித்த முழு தகவல்களும் திரட்டப்பட உள்ளது. அதற்காக அதி நவீன திறன் கொண்ட 2 செயற்கை கோள்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதற்காக ரூ.22 ஆயிரத்து 500 கோடி செலவில் வாஷிங் மெஷின் போன்ற 2 செயற்கை கோள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்த செயற்கை கோளை கேப் கானவரலில் உள்ள விமானபடை தளத்தில் இருந்து நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது.

அவற்றை டெல்பா-2 என்ற ராக்கெட் மூலம் விஞ்ஞானிகள் செலுத்தினர். இந்த ராக்கெட் 3 மாத பயணத்துக்கு பிறகு சந்திரனை சென்றடையும்.

Saturday, September 10, 2011

சனிக்கிரகத்தை சுற்றிலும் ஒளிரும் வளையங்கள்

இந்த கிரகத்தின் வெளிப்புற பகுதிகளில் விளக்குகள் தரும் வெளிச்சத்தை போன்ற பளிச் என ஒளிரக்கூடிய வளையங்கள் காணப்படுகின்றன. இந்த அற்புதமான வளைய காட்சியை காசினி ஹியூஜென்ஸ் விண்கலம் பிடித்து அனுப்பி இருந்தது.

இந்த சனிக்கிரகம் நமது பூமியில் இருந்து 8000 லட்சம் மைல் தொலைவில் அமைந்துள்ளது. சனிக்கிரகம் இரவில் ஒளிரும் வளையங்களுடன் வானில் கண்காட்சி நடத்தி கொண்டு இருக்கும் போது விண்கல கமெரா படம்பிடித்து தள்ளியது.

இந்த புகைப்படத்தில் உள்ள ஒளிரும் கிரகத்தை கூர்ந்து பார்க்கும் போது இடது புறத்தில் ஒரு சிறிய புள்ளியாக நமது கிரகம் இருப்பது தெரியவரும்.

இந்த காட்சி வழக்கத்திற்கு மாறாக உள்ளது.





Friday, September 9, 2011

சூரியனை விட 8000 மடங்கு பிரகாசமாக தெரியக்கூடிய லேசர்கள் தயாரிப்பு

பூமியில் எங்குமே நம்மைச் சுற்றிலும் CD, DVD எல்லா இடங்களிலும் லேசர்க் கதிர்கள் காணப்படுகின்றன.
இது பெரும்பாலும் கதைகளில் வரும் விண்வெளி ஆயுதங்களில் தான் காணப்படும். இதில் Spider 3 Krypton தற்போது 85 மைல் தொலைவு வரையும் தெரியக்கூடியதாக உள்ளது.

இந்தவகை லேசர்தான் தற்போது கின்னஸ் பதிவுப் புத்தகத்தில் பூமியிலுள்ளவற்றில் மிகவும் பிரகாசமான, கையடக்கமான லேசராகப் பதியப்படப் போகின்றது. இது சூரியனை நேரடியாகப் பார்ப்பதைவிட 8,000 மடங்கு பிரகாசமாகக் காணப்படுகின்றது.
கிறிப்ரனின் அமெரிக்க உற்பத்தியாளர்கள் இதற்குப் பாதுகாப்புக் கண்ணாடிகளை அணியுமாறு கூறுகின்றனர். இத்துடன் இந்தப் பாதுகாப்புக் கண்ணாடியும் 299 டொலர் விலைக்குள் சேர்த்துக் கொடுக்கப்படுகின்றது.

இந்த லேசர் ஒரு கடதாசியை எரிக்கக்கூடியதாகும். இதில் அந்த லேசர் சூடாகமல் தடுக்க ஒரு மைக்ரோபுரொசெசரும் காணப்படுகின்றது.

Wicked Lasers என்ற இதன் உற்பத்தியாளர்கள் இதில் தேவையற்ற பாவனையைத் தடுக்கும் கடவுச்சொற்கள் காணப்படுவது போன்ற பாதுகாப்பு அமைப்புக்கள் உள்ளதென்றும் கூறுகின்றனர். அத்துடன் இவற்றை வாகனங்கள் மீதோ விமானிகள், மிருகங்கள் மற்றும் செய்மதிகளை நோக்கியோ காட்டக்கூடாதென்றும் எச்சரிக்கின்றனர்.

இதனை வான்நோக்கிக் காட்டும்போது செய்மதியிலுள்ள ஒருவர் இந்தப் பச்சைக் கதிரைப் பார்க்கக்கூடியவாறு பிரகாசமாக உள்ளது. இதனைப் பெரும்பாலும் இராணுவ, தொழில்சார் மற்றும் விஞ்ஞான ஆய்வுகளிலேயே பயன்படுத்துகின்றனர்.

இணையத்திலிருந்து பச்சை லேசரை ஒரு சிறுவன் வாங்கி அதனால் கண்களைக் குருடாக்கிய சம்பவம் 2010 இல் இடம்பெற்றதால் அதன்பின்னர் அவற்றைப் பயன்படுத்துவதற்கெதிராகப் பாதுகாப்பு நிறுவனங்கள் குரல்கொடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சக்திமிக்க லேசர் சுட்டிகளை விமானிகள், சாரதிகள் மற்றும் காற்பந்தாட்டக்காரர்களை நோக்கிச் செலுத்தியதற்காகப் பலர் பிரித்தானியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Thursday, September 8, 2011

ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி தடுத்து பூமியைக் காப்பாற்ற ரஷ்யா முயற்சி

மிகப் பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி வந்து கொண்டுள்ளது. இதைத் தடுத்து பூமியைக் காப்பாற்ற ரஷ்யா முயற்சி மேற்கொண்டுள்ளது.

விண்வெளியில் விண்கற்கள் கோடிக்கணக்கில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. இவற்றில் எப்போதாவது சில புவயீர்ப்பு வளையத்திற்குள் வரும்போது பூமியை நோக்கி பாய்ந்து வரும். இந்தக் கற்கள் வரும் வேகத்திலேயே எரிந்து சாம்பலாகி விடும். சில பெரிய கற்கள் மட்டும் தப்பிப் பிழைத்து பூமியில் வந்து விழும்.

இவை விழுந்த இடத்தில் கல்லின் சைசுக்கேற்ப பள்ளம் ஏற்படுவது உண்டு. அந்த வகையில் தற்போது மிகப் பெரிய விண்கல் ஒன்று பூமியை நோக்கி வந்து கொண்டுள்ளது. இந்த விண்கல்லுக்கு அபோஃபிஸ் (Apophis) என்று பெயரிட்டுள்ளனர்.

அபோஃபிஸ் விண்கல், 2029ம் ஆண்டுவாக்கில் பூமியிலிருந்து 30,000 கிலோமீட்டர் தொலைவுக்கு நெருங்கி வரும். அதற்கு அடுத்த 7 ஆண்டுகளில் அதாவது 2036ம் ஆண்டு அது புவிவட்டப் பாதைக்குள் நுழைய வாய்ப்புள்ளதாம். இது நடந்தால் அந்தக் கல் பூமியின் மீது வந்து விழ வாய்ப்பு மிக அதிகம்.

அபோஃபிஸ் விண்கல்லின் சுற்றளவு 350 மீட்டர் அதாவது 1150 அடி என்று தோராயமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கல் 1,000,000 டன் எடை கொண்டதாக இருக்கலாம் என்கிறார்கள்.

இது பூமியின் மீது விழுந்தால், அந்த இடத்தில் பிரான்ஸ் நாட்டின் சைசுக்கு மிகப் பெரிய பள்ளம் ஏற்படும். பல அணு குண்டுகள் ஒரே நேரத்தில் வெடித்தால் ஏற்பட்டால் ஏற்படும் அளவுக்கு மாபெரும் சேதம் ஏற்படும்.

இந்தக் கல் கடலில் விழுந்தால் நாம் இதுவரை கேள்விப்பட்டிராத அளவுக்கு சுனாமி அலைகள் ஏற்பட்டு மனித குலத்துக்கு பெரும் உயிர்ச் சேதம் ஏற்படும்.

எனவே இந்த விண் கல்லை பூமியில் விழாமல் தடுக்க அமெரிக்கா உள்ளிட்ட பெரிய நாடுகளுடன் இணைந்து ரஷ்ய விஞ்ஞானிகள் முயற்சிகளில் இறங்கியுள்ளனராம்.

விரைவில் இதுதொடர்பாக ரஷ்ய விஞ்ஞானிகளின் மிகப் பெரிய கூட்டம் கூடவுள்ளது. இதுகுறித்து ரஷ்ய விண்வெளிக் கழகத்தின் தலைவரான அனடோலி பெர்மினோவ் கூறுகையில், விரைவில் எங்களது கழகத்தின் கூட்டம் நடைபெறவுள்ளது. கல் பூமியின் மீது விழாமல் தடுக்க என்ன செய்யலாம் என்பது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது என்றார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், இந்தக் கல் பூமியின் மீது வந்து விழுந்தால் லட்சக்கணக்கான உயிர்கள் பலியாகும். பல ஆயிரக்கணக்கான ஊர்கள் சாம்பலாகி விடும்.

இது வந்து விழும் வரை காத்திருக்காமல், அதைத் தடுக்கும் வகையிலான பாதுகாப்பு நடைமுறைகளை சில கோடிகளை செலவழித்து மேற்கொள்வது நல்லது என நாங்கள் கருதுகிறோம். வரும் முன் காத்து்க கொள்ளும் அடிப்படையே இது.

விரைவில் அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றின் விண்வெளி நிபுணர்களுடன் இணைந்து ஒரு ஆய்வுக் கூட்டம் நடக்கவுள்ளது. பூமிக்கு ஏற்படவுள்ள இந்தப் பேரழிவை எப்படி சமாளிப்பது என்பது குறித்து இதில் ஆராயப்படும்.

இந்தக் கல் பூமியில் வந்து விழாமல் தடுக்கும் வகையில் ஒரு பிரமாண்ட ராக்கெட்டை அனுப்பி அதை சிதறடிப்பது அல்லது திசை திருப்புவது, அல்லது அந்தக் கல்லுக்குள் வெடி பொருட்களை புதைத்து வெடிக்கச் செய்வது என பல யோசனைகள் கூறப்படுகின்றன என்கிறார் அனடோலி.

இதுகுறித்து அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா கூறுகையில், இந்த விண்கல் பூமியின் மீது விழும்போது மிகப் பெரிய அளவுக்கு நாசம் ஏற்படும். எங்களுடைய கணக்குப்படி 2036ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி இந்த விண்கல் பூமியைத் தாக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன் பூமியை எரிகல் தாக்கினால் என்ற கற்பனையின் அடிப்படையில் Armageddon என்ற ஹாலிவுட் திரைப்படம் வெளியானது.

மைக்கேல் பே இயக்கிய அந்தப் படத்தில் பூமியைக் காக்க புரூஸ் வில்லிஸ் தலைமையில் ஒரு ‘டிரில்லர்’கள் குழு எரிகல்லில் தரையிறங்கி அணு குண்டு வைத்து அதை இரண்டாக உடைத்து பூமி மீது மோதால் திசை திருப்பும்.

கிட்டத்தட்ட இந்தக் கதை உண்மையாகிவிடும் போலியிருக்கிறது!

Wednesday, September 7, 2011

உலகின் முதல் விண்வெளிப் பயணி

* உலகின் முதல் விண்வெளிப் பயணி ' லைக்கா ' என்கிற நாய் . 1957 -ம் வருடம் நவம்பர் மூன்றாம் தேதி ரஷ்யாவின் ஸ்புட்னிக் விண்கலத்தில் பறந்தது லைக்கா . இது சுற்றுப் பாதையில் நான்கு நாட்கள் உயிரோடு இருந்ததாக ரஷ்ய விஞ்ஞானிகள் அறிவித்தார்கள் . உண்மையில் ராக்கெட் கிளம்பும்போது பயத்திலேயே உயிரை விட்டுவிட்டது லைக்கா . இந்த உண்மை கிட்டத்தட்ட 45 வருடங்கள் கழித்து 2003 -ம் ஆண்டுதான் தெரிய வந்தது !

* ' நிலவிலே கால் பதித்தவர் ' என்று சொன்ன உடனேயே நம் நினைவுக்கு வருபவர் நீல் ஆர்ம்ஸ்ட்ராங் . ஆனால், அவரோடு நிலவுக்குச் சென்ற பஸ் ஆல்ட்ரினை நம்மில் பலருக்குத் தெரியாது . உண்மையில் நிலவில் முதலில் காலடி வைக்க அனுப்பப்பட்டவர் ஆல்ட்ரின்தான் . அவரைப் புகைப்படம் எடுக்க அனுப்பப்பட்டவர்தான் ஆம்ஸ்ட்ராங் . அமெரிக்க விண்கலம் நிலவில் இறங்கிய கொஞ்சநேரத்துக்கு தூசு மண்டலம் தரையை மறைக்க, புதைகுழியில் இறங்குவது போன்ற பயம் ஆல்ட்ரினுக்கு வந்துவிட்டது . எனவே அவர் இறங்கவில்லை .
இதை கவனிக்காமல் ஆம்ஸ்ட்ராங் இறங்கிவிட்டார் . இந்த குற்ற உணர்ச்சியாலோ என்னவோ ஆம்ஸ்ட்ராங் நிலாவில் தன்னை ஒரு புகைப்படம்கூட எடுத்துக்கொள்ள வில்லை . ஆல்ட்ரினை மட்டுமே புகைப்படம் எடுத்தார் . பூமி திரும்பிய ஆல்ட்ரின் தனக்கான அங்கீகாரம் கிடைக்காததில் ரொம்பவே நொந்து போனார் . தன் காரில் ' Moon First ' என்று எழுதிக்கொண்டு முழு போதையில் விரக்தியோடு வெகுகாலம் திரிந்தார் !
* சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒரு பயம் ' காஸ்மோஃபோபியா ' ! சுண்டெலியில் இருந்து சுனாமி வரை எதிப் பார்த்தாலும் உயிர் பதறினால், அதுதான் காஸ்மோஃபோபியா . இவர்களால் நிம்மதியாகச் சாப்பிட முடியாது தூங்க முடியாது .
* பயத்தைப்பற்றிய முதல் மருத்துவ ஆய்வுக்கு ' லிட்டில் ஆல்பர்ட் பரிசோதனை ' என்று பெயர் . அதிகச் சத்தங்களைக் குழந்தைகள் கேட்கும்போது அவர்களுக்கு ஏற்படும் முதல் உணர்ச்சியே பயம்தான் என்பதையும், மற்ற குழந்தைகள் பயப்படாத ஒரு குறிப்பிட்ட விஷயத்துக்கு ஒரு குழந்தையைப் பயமுறுத்தவும் முடியும் என்பதையும் இந்தப் பரிசோதனையின் மூலம் நிரூபித்தார் ஜான். பி. வாட்ஸன் என்ற ஆய்வாளர் .

* 100 மீட்டர் தூரத்துக்குள் ஒரு குண்டூசி விழுந்தால்கூட அதைத் துல்லியமாக உணரும் திறனுள்ள உலகின் புத்திசாலி நாய் இனம் டாபர்மேன் . அனால், அவைகளுக்கு தன் பின்னால் இருப்பது தன் வால்தான் என்று பயத்தினால் தெரியாமல் போகிறது !

Tuesday, September 6, 2011

NASA Spacecraft Images Offer Sharper Views of Apollo Landing Sites

NASA's Lunar Reconnaissance Orbiter (LRO) captured the sharpest images ever taken from space of the Apollo 12, 14 and 17 landing sites. Images show the twists and turns of the paths made when the astronauts explored the lunar surface.

This interactive shows two LRO images of the Apollo 17 landing site. Click and drag on the white slider bar to wipe from one to the other. The left image was released today; the right image is a zoom-in on an LRO image released in 2009. LRO was moved into a lower orbit to capture the new image. The images do not line up perfectly because of differences in lighting conditions, angle of the LRO Camera, and other variables. Image brightness and contrast have been altered to highlight surface details. (Credit: NASA's Goddard Space Flight Center/ASU)
› Left image | larger version | larger version (unlabeled)
› Right image

At the Apollo 17 site, the tracks laid down by the lunar rover are clearly visible, along with the last foot trails left on the moon. The images also show where the astronauts placed some of the scientific instruments that provided the first insight into the moon's environment and interior.

"We can retrace the astronauts' steps with greater clarity to see where they took lunar samples," said Noah Petro, a lunar geologist at NASA's Goddard Space Flight Center in Greenbelt, Md., who is a member of the LRO project science team.

All three images show distinct trails left in the moon's thin soil when the astronauts exited the lunar modules and explored on foot. In the Apollo 17 image, the foot trails, including the last path made on the moon by humans, are easily distinguished from the dual tracks left by the lunar rover, which remains parked east of the lander.

"The new low-altitude Narrow Angle Camera images sharpen our view of the moon's surface," said Arizona State University researcher Mark Robinson, principal investigator for the Lunar Reconnaissance Orbiter Camera (LROC). "A great example is the sharpness of the rover tracks at the Apollo 17 site. In previous images the rover tracks were visible, but now they are sharp parallel lines on the surface."

This interactive shows two LRO images of the Apollo 12 landing site. Click and drag on the white slider bar to wipe from one to the other. The left image was released today; the right image is a zoom-in on an LRO image released in 2009. LRO was moved into a lower orbit to capture the new image. The images do not line up perfectly because of differences in lighting conditions, angle of the LRO Camera, and other variables. Image brightness and contrast have been altered to highlight surface details. (Credit: NASA's Goddard Space Flight Center/ASU)
› Left image | larger version | larger version (unlabeled)
› Right image

At each site, trails also run to the west of the landers, where the astronauts placed the Apollo Lunar Surface Experiments Package (ALSEP) to monitor the moon's environment and interior.

This equipment was a key part of every Apollo mission. It provided the first insights into the moon's internal structure, measurements of the lunar surface pressure and the composition of its atmosphere. Apollo 11 carried a simpler version of the science package.

One of the details that shows up is a bright L-shape in the Apollo 12 image. It marks the locations of cables running from ALSEP's central station to two of its instruments. Although the cables are much too small for direct viewing, they show up because they reflect light very well.

NASA Goddard's Dr. Noah Petro discusses the significance of the new Apollo images from LRO. (Credit: Chris Smith, NASA's Goddard Space Flight Center)
› Download this and related videos in broadcast quality from NASA Goddard's Scientific Visualization Studio

The higher resolution of these images is possible because of adjustments made to LRO's orbit, which is slightly oval-shaped or elliptical. "Without changing the average altitude, we made the orbit more elliptical, so the lowest part of the orbit is on the sunlit side of the moon," said Goddard's John Keller, deputy LRO project scientist. "This put LRO in a perfect position to take these new pictures of the surface."

The maneuver lowered LRO from its usual altitude of approximately 31 miles (50 kilometers) to an altitude that dipped as low as nearly 13 miles (21 kilometers) as it passed over the moon's surface. The spacecraft has remained in this orbit for 28 days, long enough for the moon to completely rotate. This allows full coverage of the surface by LROC's Wide Angle Camera. The cycle ends today when the spacecraft will be returned to its 31-mile orbit.

The paths left by astronauts Alan Shepard and Edgar Mitchell on both Apollo 14 moon walks are visible in this image. (At the end of the second moon walk, Shepard famously hit two golf balls.) The descent stage of the lunar module Antares is also visible. (Credit: NASA's Goddard Space Flight Center/ASU)
› Larger image | unlabeled version

"These images remind us of our fantastic Apollo history and beckon us to continue to move forward in exploration of our solar system," said Jim Green, director of the Planetary Science Division at NASA Headquarters in Washington.

LRO was built and managed by Goddard. Initial research was funded by the Exploration Systems Mission Directorate at NASA Headquarters. In September 2010, after a one-year successful exploration mission, the mission turned its attention from exploration objectives to scientific research in NASA's Science Mission Directorate.

Launch Given a "Go" by Review

In preparation for the launch of NASA's twin moon-bound GRAIL spacecraft aboard a United Launch Alliance Delta II rocket on Thursday, the final Launch Readiness Review concluded this morning with a "go" for launch. The prelaunch news conference will follow at 1 p.m. EDT (10 a.m. PDT) and can be seen live on NASA TV and on the web at www.nasa.gov/ntv.

With the development of a low pressure trough, forecasters now are giving a 40 percent chance of good weather at launch time for both Thursday or Friday's liftoff from Cape Canaveral Air Force Station's Space Launch Complex 17B in Florida. There are two instantaneous launch windows at 8:37:06 a.m. and 9:16:12 a.m.

NASA has invited 150 followers of the agency's Twitter account to Florida for a two-day launch "Tweetup" on Wednesday and Thursday that will culminate with the launch

Saturday, September 3, 2011

வேற்றுக்கிரவாசியால் கற்பழிக்கப்பட்ட பெண்!

அண்மைக் காலங்களாக ஏலியன்கள் பற்றிய சர்ச்சை அதிகரித்துக் கொண்டே போய்க் கொண்டிருக்கிறது. ஏலியன்கள் பற்றி இறுதியாக பிரேசில் நாட்டில் பறக்கும் தட்டில் வந்திறங்கி சில ஏலியன்கள் பனிப்பகுதிக்குள் கால்பதித்து நடந்து சென்றதாக காணொளியுடன் வெளியாகி செய்தியின் பரபரப்பு அடங்குவதற்கு முன்னர் இன்னுமொரு பீதியைக் கிளப்பும் செய்தி வெளியாகியுள்ளது.

இத்தாலியைச் சேர்ந்தே Gennargentu, Sardinia பகுதியைச் சேர்ந்த 40வயதான Giovanna Podda எனும் யுவதி தன்னை வேற்றுக்கிரவாசி கற்பழித்து விட்டதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். இச்சம்பம் பற்றி மேலும் தெரியவருவதாவது :-

குறித்த பெண் தன்னை பொஸ்பரஸ் தீக்காயங்களுடனான வேற்றுக்கிரகவாசி ஒருவர் கடத்தி சென்று கற்பழத்து விட்டதாக இத்தாலிய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் நான் பொலீசாரிடம் முறைப்பாடு தெரிவித்ததும் அவர்கள் என்னைப் பார்த்து கேவலமாக சிரிக்கிறார்கள். இந்த சம்பவம் பற்றி யாரும் நம்புவதாக இல்லை.

ஆனால் எனக்கு மட்டும்தான் தெரியும் நான் மட்டுமல்ல இவ்வாறான ஏராளமான பெண்கள் ஏலியன்களால் கற்பழிக்கப்படுகிறார்கள் என கூறிய அவர் இது பற்றி அந்த பெண்கள் வெளியில் சொல்ல வெட்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


Thursday, September 1, 2011

செவ்வாய் கிரகத்தில் தோட்டம் அமைக்க விஞ்ஞானிகள் திட்டம்

அமெரிக்காவின் நாசா விண்வெளி விஞ்ஞானிகள் வருகிற 2030ம் ஆண்டில் செவ்வாய்கிரகத்தில் ஆய்வு தொடங்க திட்டமிட்டுள்ளனர். இந்த ஆய்வு 5 வருடங்கள் நடைபெற உள்ளது.

அதில் பங்கேற்கும் விஞ்ஞானிகளில் தலா ஒருவருக்கு 3,175 கிலோ உணவு தேவைப்படுகிறது. எனவே தேவையான உணவை சமாளிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது அவர்கள் தங்கி ஆய்வு செய்யும் விண்வெளி ஓடத்தில் ஒரு வீட்டு தோட்டம் அமைத்து அதில் காய்கறிகள் மற்றும் கிழங்கு வகைகளை பயிர் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கான வசதிகளுடன் அதிநவீன தொழில்நுட்பத்துடன் அந்த விண்வெளி ஓடத்தை வடிவமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்கான ஆய்வு டெக்சாஸ் மாகாணத்தில் ஹிஸ்டனில் உள்ள டாக்டர் மயா கூப்பர் நாசா விண்வெளி உணவு சோதனைக்கூடத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தகவலை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

வைரங்களினால் ஆன கிரகம் கண்டுபிடிப்பு

அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இத்தாலி, ஜேர்மனி, இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் சர்வதேச விஞ்ஞானிகள் குழுவை அமைத்துள்ளனர்.

அவர்கள் செஷிர் நகரில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் இருந்து சக்தி வாய்ந்த டெலஸ் கோப் மூலம் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது வான்வெளி வீதியில் வழக்கத்தை விட வித்தியாசமாக ஒரு நட்சத்திரத்தை கண்டுபிடித்தனர். அதற்கு "புல்சர்" என பெயரிட்டு ஆராய்ச்சி செய்தனர். அது ஒரு புதிய கிரகம் என கண்டுபிடித்தனர்.

Saturday, August 27, 2011

நட்சத்திரத்தை விழுங்கும் கறுப்பு ஓட்டை

விண்வெளியில் பெரிய கறுப்பு ஓட்டைகள் நட்சத்திரங்களை விழுங்குவது உண்டு. இந்த அரிய காட்சியை இதுவரை நாம் கண்டது இல்லை.

தற்போது முதல் முறையாக நட்சத்திரத்தை விழுங்கும் கறுப்பு ஓட்டையை விஞ்ஞானிகள் வெளியிட்டு உள்ளனர்.

உலக அளவில் வெளியான முதல் படம் இதுவாகும். இந்த நட்சத்திரத்தை விழுங்கும் நிகழ்வு 39 லட்சம் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் நிகழ்ந்துள்ளது. விண்வெளி ஆய்வாளர்கள் சக்தி வாய்ந்த நாசா நுண்ணோக்கி மூலம் இதனை படம் பிடித்துள்ளனர்.

ஆச்சரியம் தரும் வகையில் அவர்கள் தீவிரமான எக்ஸ்ரே ஒளி வீச்சுகளையும் பார்த்தனர். அப்போது நட்சத்திர மண்டலத்தில் சூரியன் போன்ற மிகப் பெரிய நட்சத்திரம் பெரும் கறுப்பு ஓட்டையில் மூழ்குவதையும் அவர்கள் கண்டுபிடித்தனர்.
பெரும் கறுப்பு ஓட்டைகள் கவர்ந்து இழுக்க கூடிய ஈர்ப்பு சக்தியை அதிகம் கொண்டதாகும். அந்த கறுப்பு ஓட்டைகள் ஈர்த்த நட்சத்திரத்தை மெல்ல சாப்பிட்டு விடும் தன்மை கொண்டது ஆகும்.

அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழக பேராசியர் டேவிட் பர்ரோஸ் தலைமையிலான குழு இந்த அரிய நிகழ்வை படம்பிடித்துள்ளது.

Thursday, August 25, 2011

2013ம் ஆண்டு முதல் வான்வெளியில் இருந்து பூமியின் அழகை ரசிக்கலாம்

2013ஆம் ஆண்டு முதல் ஆகாயத்தில் பறந்தபடி பூமியையும், தினமும் உதிக்கும் சூரியனின் அழகையும் பார்த்து ரசிக்க முடியும்.

பூமிக்கு மேல் தொங்கி கொண்டு உலக காட்சிகளை பார்ப்பது என்பது நம்மை சிலிர்க்க வைக்கும் சாகசமாக இருக்கும். இந்த வித்தியாசமான பயணத்திற்கு ஆகும் செலவு 5 மணி நேரத்திற்கு 90 ஆயிரம் பவுண்ட் என கணக்கிடப்பட்டுள்ளது.

பூமியின் கடைசி வளைவு பகுதியை ஹீலியம் நிரப்பப்பட்ட பலூன் கலத்தில் இருந்து பார்த்து ரசிக்கலாம். இப்படி பயணம் செய்பவர்கள் சூரிய உதயத்தை பார்க்கும் முதல் மனிதர்களாகவும் இருப்பார்கள்.

பூமிக்கு மேல் 22 மைல் பயணம் செய்பவர்கள் செல்லும் கலம் 2 பைலட்டுகள் மற்றும் 4 பயணிகள் அமரும் வகையில் உள்ளது. இந்த கலத்துடன் 423 அடி விட்டம் கொண்ட ஹீலியம் பலூனும் இணைக்கப்பட்டு இருக்கும்.

ஹீலியம் காற்று ஒரு பொருளை உயரத்தில் கொண்டு செல்லக்கூடிய தன்மை படைத்தது ஆகும். இந்த கலத்திற்கு ப்ளூன் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த கலம் விண்வெளி பகுதியை அடைய ஒரு மணி நேரம் ஆகும்.

அதன் பின்னர் 3 மணி நேரம் பூமிக்கு மேல் பயணம் செய்த பின்னர் மீண்டும் அது திரும்பும். இந்த ஹீலியம் கலத்தை ஸ்பெயின் தொழிலதிபர் ஜோஸ் மரியானோ லோபஸ் உருவாக்கி உள்ளார்.

மனித உடலை விட குளிர்ச்சியான நட்சத்திரங்கள் கண்டுபிடிப்பு


நாசாவின் நீண்ட தூர அகச்சிவப்பு ஆய்வு கண்டுபிடிப்பு விவரங்களை பயன்படுத்தி விஞ்ஞானிகள் குளிர்ச்சியான நிழல் நட்சத்திரங்களை கண்டுபிடித்து உள்ளனர்.

இந்த நட்சத்திரங்கள் மனித உடலை விட குளிர்ச்சித் தன்மை பொருந்தியதாக உள்ளன. விண்வெளி ஆய்வாளர்கள் இந்த நட்சத்திரங்களுக்கு ஒய் ட்வார்ப் என பெயர் சூட்டியுள்ளனர்.

கண்ணுக்கு தெரியக் கூடிய வெளிச்சத்தில் பார்க்கக்கூடிய தொலைநோக்கியை பயன்படுத்தி பார்த்த போது மங்கிய வெளிச்சத்தில் இருந்த 6 ஒய் ட்வார்ப் நட்சத்திரங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

இந்த நட்சத்திரங்கள் நமது சூரியனுக்கு அருகாமையில் 40 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளன. இந்த சிறிய நட்சத்திரங்கள் மற்றும் இதரப் பொருட்களுக்காக வைஸ் விவரங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டன.

அடர்த்தியான அகச்சிவப்பு கதிர் காரணமாக அவை மிக மங்கிய வெளிச்சத்துடன் காணப்பட்டன. பழுப்பு நிற சிறிய குடும்ப நட்சத்திர வரிசையில் ஒய் நட்சத்திரங்கள் மிக குளிர்ச்சியானவை. இதனை தவறிய நட்சத்திரங்கள் என கூறுவது உண்டு. இந்த ஆய்வு அறிக்கை கிர்க் பாட்ரிக் ஆய்வாளர் தலைமையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கு புதிய ஆதாரம் : நாசா

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கு புதிய ஆதாரம் : நாசா.

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான அறிகுறிகளை 10 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா கண்டுபிடித்தது.

செவ்வாய் கிரகத்தை படம் பிடித்து அனுப்புவதற்காக, ஒரு செயற்கைக்கோளையும் நாசா அனுப்பி வைத்துள்ளது. அந்த செயற்கைக்கோள் அனுப்பிய படங்களை ஆய்வு செய்த நாசா விஞ்ஞானிகளுக்கு, செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான புதிய ஆதாரம் கிடைத்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் வெப்பமான காலநிலை உள்ள மாதங்களிலும் தண்ணீர் இருப்பதை அந்த ஆதாரம் உணர்த்துவதாக நாசா விஞ்ஞானி பிலிப் கிறிஸ்டன்சன் தெரிவித்துள்ளார். அங்குள்ள தண்ணீர், உவர்ப்பாகவும், நிலப்பரப்புக்கு அடியிலும் இருக்கக்கூடும் என்று அவர் கூறினார்.

Wednesday, August 24, 2011

சூரியனில் ஏற்படும் தீப்பிழம்புகளால் ஆபத்து: நாசா விண்வெளி ஆய்வு

நாசா விண்வெளி ஆய்வு மையத்தினரால் சூரிய இயக்க கண்காணிப்பு கருவியின் மூலம் சூரியனைப் பற்றி தொடர்ந்து கண்கானிக்கப்பட்டது.

அதில் சூரியன் சுழலும் போது இருண்ட பகுதிகளுக்கும் காந்தபுலங்களுக்கும் இடையிலான செயற்பாட்டினால் கடந்த ஐந்து ஆண்டுகளில் சூரியனில் உருவான பெரிய சூரியப் தீப்பிழம்புகள் உருவானதாக இங்கிலாந்தின் மத்திய பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சூரியன் சுழலும் போது இருண்ட பகுதிகளின் இயக்கப்பாட்டினால் கடந்த பிப்ரவரி மாதம் பெரிய தீப்பிழம்புகள் உருவானதாகத் தெரிவிக்கப்படுகிறது. சன்ஸ்பொர்ட்ஸ் அல்லது சூரியனின் இருண்ட பகுதிகளினால் காந்தப்புல சக்தி அதிகமாக உருவாவதாக ஆய்வாளர் டேனியல் பிறவுண் தெரிவித்துள்ளார்.

எலாஸ்டிக் வயர்களை கைகளினால் இழுப்பதன் மூலம் அந்த வயர்களில் விசை சேகரிக்கப்படுவதாகவும் அவற்றை விடும் போது சக்தியுடன் செயற்படுவதாகவும், இதனையொத்த செயல்முறையே சூரியனின் இருண்ட பகுதியில் இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

சூரியன் சுழலும் போது இருண்ட வலயங்களில் உள்ள சக்தி சேமிக்கப்பட்டு அவை காந்தப்புல சக்திகளுடன் மோதும் போது பெரிய ஒளியுடன் தீப்பிழம்பாக உருவெடுப்பதாக அவர் தெரிவித்தார். க்ளாஸ் எக்ஸ் ரக சூரியப் பிழம்புகளே மிகவும் வலுவானவை இருக்கின்றன எனவும் தெரிவித்தார்

Monday, August 22, 2011

கண்ணுக்கு புலப்படாத மாசுகளை அகற்றும் செய்மதி

கண்ணுக்குப் புலப்படாத மாசுக்களை அகற்றும் நுட்பமான பணியில் செய்மதிகளை ஈடுபடுத்த உள்ளதாக லண்டனின் லெய்செஸ்ரர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இப்புதிய கருவி சூழல் மாசடைவினைத் தடுப்பதற்கு உதவுமென நம்புகின்றனர் விஞ்ஞானிகள். இக்கருவியானது 15 வருடத் திட்டத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றது.

இது பூமியின் சூழல் தரவுகளைச் சேகரிக்கும் Envisat எனும் செய்மதிக்குக் தரவுகளைச் சேமிக்கும் பணியில் கூடுதல் உதவிகளை வழங்கும் என்றும் கருதப்படுகின்றது.

800கி.மீ. அப்பாலிருந்தும் லண்டனின் அல்லது எந்தவொரு பெரிய நகரத்தினதும் வரைபடங்களை இதனால் பெறக்கூடியதாயிருக்கும் என்பதுடன் இதன்மூலம் எந்த நகரின் வான்பரப்பு நன்றாக அல்லது மோசமாக உள்ளது என அறியவும் முடியும். இதன் மூலம் எந்த நகரின் எந்த வீதியில் மாசு அதிகம் என்று கூடக் கண்டுபிடிக்கமுடியும்.

இதன்மூலம் அவ்வீதியின் மாசினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியுமென்கின்றனர் விஞ்ஞானிகள். சூழல் மாசினால் வருடாந்தம் 2 மில்லியன் முற்கூட்டிய இறப்புக்கள் ஏற்படுவதாக உலக சுகாதார அமைப்புக் கூறுகின்றது.

தற்போது தம்மால் ஒரு நாட்டின்மீது அல்லது ஒரு பரந்த பகுதி மீது உள்ள நைதரசன்ஈரொட்சைட்டினை தான் அளக்கமுடியும் என்றும் இப்புதிய கண்டுபிடிப்பால் ஒரு நகரத்தையும் ஒரு வீதியின் மாசு மட்டத்தினையும் கூட அளக்க முடியும் என்கின்றனர் லெய்செஸ்ரர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்.

பூமியை நோக்கி வரும் விண்கல்லை அழிக்க நாசா திட்டம்

பூமியை நோக்கி மோதும் வேகத்துடன் வந்துகொண்டிருக்கும் Elenin எனும் விண்கல்லை அழிக்க நாசா திட்டமிட்டுள்ளது.

இதற்காக இரு விண்கலங்கள் ஏவப்படவுள்ளதாகவும் ஒன்று அக்கல்லை மோதி வேறு பாதைக்குக் கொண்டுசெல்லுமென்றும் மற்றையது அம்மோதலைப் பற்றிய தரவுகளைப் பதிவுசெய்யுமெனவும் கூறப்படுகின்றது.

கடந்த டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட Elenin எனும் விண்கல்தான் மிகவேகமாகத் தனது பாதையில் வருவதாகக் கூறப்படுகின்றது. இதைவிடவும் 1600 அடி அகலமான 99942 யுpழிhளை விண்கல்லானது 2036 இல் பூமியைத் தாக்கக்கூடுமென்றும் கூறப்படுகின்றது.


இக்கல் பூமியின்மீது மோதும்போது 3 நாட்கள் சூரியனை மறைத்து இருளாக்கிவிட்டுத்தான் மோதும் என்ற வதந்தியும் நிலவுகின்றது

விண்வெளிக் கப்பலில் பணிசெய்த பாரத வீராங்கனை கல்பனா செளலா


விண்வெளித் தீர மாது கல்பனாவின் மின்னல் போன்ற வாழ்வு!

2002 ஆம் ஆண்டு மே மாதம், ‘பெண் விண்வெளி வீராங்கனைகள் ‘ என்னும் புத்தகத்துக்குக் கல்பனா செளலாவை நேர்முக வினாக்கள்


கேட்ட கனடாவின் எழுத்தாளி, லாரா உட்மன்ஸீ [Laura Woodmansee] கூறியது: ‘கல்பனா விண்வெளித் தேர்வில் வேட்கை மிகுந்தவராகத் தோன்றினார்! துடிப்பாக வாலிபம் பொங்கி இனிப்புக் கடைமுன் நோக்கும் மதலை போல் ஆர்வத்துடன் நடமாடினார்! தான் செய்யும் வேலைகளில் பெரும் இறுமாப்புக் கொண்டு, பங்கு கொள்ளப் போகும் கொலம்பியா பயணப் பணியில் முற்றிலும் ஊறிப் போய், உள்ளொளி வீசக் காணப்


பட்டார்! மெய்யாகவே அவர் எதிர்கால விண்வெளிக் கனவுகளில் மிதந்தார்! சந்திர மண்டலத்தில் ஆராய்ச்சிகள் செய்ய ‘விஞ்ஞான அரங்கு ‘ [Scientific Base] ஒன்றை நிறுவிப் பணி புரியத் தான் விரும்புவதாகக் கூறினார்! ‘ இவ்வாறு மேதை போல் பேசி, மங்கிடப் போகும் மாபெரும் ஓர் அறிவுச் சுடர் மகத்தான ஒளி வீசித் திடீரென மின்னல் போல் மறைந்தது!

பாரத நாட்டில் யாரும் அறியாத பாமரக் குடும்பத்தில் பிறந்து, பள்ளிப் படிப்பின் போது விமானப் பொறியியலில் வேட்கை கொண்டு, பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் 20 வயதில் விமானத்துறைப் பொறியியல் பட்டம் பெற்று, அதற்குப் பிறகு
அமெரிக்கா நோக்கிச் சென்று, அங்கே 22 ஆவது வயதில் டெக்ஸஸ் பல்கலைக் கழகத்தில் M.Sc. [Aerospace Engineering] பட்டமும், அடுத்து 26 வயதில் கொலொராடோ பல்கலைக் கழகத்தில் விண்வெளி எஞ்சினியரிங்கில் Ph.D. [Aerospace Engineering] பட்டத்தையும் பெற்று, நாஸாவில் 32 ஆவது வயதில் விண்வெளி வீராங்கனை ஆகிய கல்பனா செளலாவைப் போன்ற வேறோர் வனிதாமணி உலகத்தில் இதுவரை வாழ்ந்திருக்கிறா
ரா ?

எட்டாண்டுகள் அமெரிக்க அண்டவெளி விமானியாகத் திகழ்ந்து, இரண்டு முறை விண்வெளி மீள்கப்பலில் வெற்றிகரமாய்ச் சுற்றி, வானை நோக்கி விண்மீன்களின் கண்கொளாக் காட்சியில் கவர்ச்சி யுற்று, அந்த இனிய கதைகளை நமக்கு மீண்டும் சொல்லாமல் மறைந்த, மாதர் குல மாணிக்கத்தை மனித இனம் மறக்க முடியுமா ? ‘காரிருளில் விண்மீன்களைக் காண்பதும், பகலில் பூகோளம் வேகமாய் உருள்வதை நோக்குவதும் என் நெஞ்சில் புல்லரிப்பை உண்டு பண்ணுகிறது! இரண்டாம் தடவையாக அவற்றைக் காண்பது ஓர் வாழும் கனவு! இனிய கனவு! அதுவும் மற்றும் ஒரு முறை! ‘ கொலம்பியா விண்கப்பலில் ஏறும் முன்பு இவ்வாறுக் கூறிச் சென்ற கல்பனா மெய்க்கனவிலிருந்து விடுபட்டு மீண்டும் விழிக்கவே வில்லை!

பாரதப் பிரதமர் அடல் பெஹாரி வாச்பையி அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சுக்கு வருந்தல் தந்தி அனுப்பினார்: ‘இந்த துக்க நாளில் நாங்களும் உங்களுடன் இணைந்து வருந்துகிறோம். விண்வெளிக் கப்பலில் பணியாற்றிய உன்னத வாலிப ஆடவர், மாதர் அனைவர் சார்பிலும் எங்கள் இதயங்கள் நோகுகின்றன. மரணமானவர்களில் ஒருவர் பாரதத்தில் பிறந்தவர் ஆனாதால், இந்தியாவில் எங்களுக்கு இந்த பரிதாபமான விபத்து, பெருந்துயரை உண்டாக்கி யிருக்கிறது!

மீள்கப்பல் பயணத்தில் மீளாது போன ஏழு விண்வெளித் தீரர்கள்!

கொலம்பியா மீள்கப்பல் இருபதாம் நூற்றாண்டு உருவாக்கிய ஓர் நூதனப் பறக்கும் பூத வாகனம்! அது ஏவுகணை போல் [Missile] ஏவப்பட்டு, அண்டவெளிச் சிமிழ்போல் [Spacecraft] சுழல்வீதியில் [Orbit] சுற்றி வந்து, இறக்கை முளைத்த ஜெட் விமானம் போல் [Aircraft], தரைதொட்டு இறங்கும் முத்திறம் உடைய, ஓர் ஒப்பில்லா பொறி நுணுக்க யந்திரம்! 1986 இல் நிகழ்ந்த விண்கப்பல் சாலஞ்சர் விபத்துக்குப் பின்பு கடந்த 16 ஆண்டுகளாக, நான்கு விண்வெளிக் கப்பல்கள் நூற்றுக்கும் மேற்பட்ட பயணங்களை வெற்றிகரமாக முடித்திருக்கின்றன! தொலைக்காட்சி சாதனத்தில் விண்கப்பல் செங்குத்தாக ஏறுவதும், பயணத்தை முடித்துக் குடை விரித்திழுக்க தொடுதளத்தில் விரைந்து, அது வந்து நிற்பதும் கண்கவர்க் காட்சியே! அக்காட்சிகளை ஆயிரக் கணக்கான மாந்தர்கள் தூரத்தில் நின்று ஏவுதளத்து அருகிலும், இறங்கு தளத்து அருகிலும் கண்டு புளதாங்கிதம் அடைகிறார்கள்!

ஆனால் 2003 பிப்ரவரி முதல் தேதி யன்று ஃபிளாரிடா தொடுதளத்தை நோக்கி இறங்கிய கொலம்பியா விண்கப்பல் 16 நிமிடங்களுக்கு முன்பு, காலிஃபோர்னியா டெக்ஸஸ் வானிலே பிளவடைந்து சிதறிப் போவதை நேராகவும் தொலைக்காட்சி மூலமாகவும் கண்ட உலக மக்கள், அடைந்த வேதனையை எவ்விதம் விவரிப்பது ? விண்கப்பலில் பறந்த ஏழு விண்வெளி வீரர்களை மகிழ்ச்சியோடு வரவேற்க வந்த தாய், தந்தையர், கணவர், மனைவிமார், சின்னஞ் சிறு பிள்ளைகள் ஆகியோர் மனமுடைந்து மயக்க முற்றதை எப்படி வார்த்தைகளில் எழுதுவது ?

நியூயார்க் நகரில் 2001 செப்டம்பர் 11 தேதிக் காலை வேளை, இரட்டைக் கோபுர மாளிகைகளில் நிகழ்ந்த கோரக் காட்சியை மக்கள் நேராகவும், தொலைக் காட்சியிலும் கண்டு துடிப்புற்ற பின்பு, மறுபடியும் அதுபோல் ஒரு கோர மரணச் சம்பவம் நிகழ்வதைப் பார்த்துத் தாங்க முடியாத துயரத்தில் ஆழ்ந்தனர்! பாரத நாட்டில் பிறந்து அமெரிக்க விண்வெளி விமானியான, கல்பனா செளலா விண்கப்பலில் வந்து இறங்குவதைக் கண்டு வாழ்த்த, இந்தியாவில் அவர் படித்த தாகூர் பால் நிகேதன் பள்ளி நண்பர்கள் ஆடிப் பாடி ஆரவாரம் செய்து கொண்டிருந்த அனைவரும் அப்படியே கல்லாய் நின்றனர்!

கொலம்பியா பயண ஆளுநர் ரிக் ஹஸ்பன்ட் [Rick Husband 45], பயண விமானி, வில்லியம் மெக்கூல் [William McCool 41], பயணச் சிறப்புநர் மைக்கேல் ஆன்டர்ஸன் [Michael Anderson 43], பயணச் சிறப்புநர், டேவிட் பிரெளன் [David Brown 46], பயணச் சிறப்புநர் இலான் ராமோன் [Ilan Ramon 47], பயணச் சிறப்புநர், மருத்துவ டாக்டர் லாரல் கிளார்க் [Dr. Laurel Clark 41], பயணச் சிறப்புநர், பறப்பியல் டாக்டர் கல்பனா செளலா [Kalpana Chawl 41] ஆக மொத்தம் ஏழு பேர் [ஐந்து ஆடவர், இரு மாதர்] விபத்தில் மாண்டனர்! ஏழு பேரில் இலான் ராமோன் இஸ்ரேலிலிருந்து பங்கெடுத்த முதல் விண்வெளி விமானி! மற்ற ஆறு பேரும் அமெரிக்கர்! இந்தியாவில் பிறந்து முதல் அமெரிக்க விண்வெளி விமானியான கல்பனா செளலா இரண்டாம் முறையாக விண்கப்பலில் பயணம் செய்தவர்!

விண்வெளி மீள்கப்பல் இறங்கும் போது வானில் வெடித்தது!

1986 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதி விண்வெளி மீள்கப்பல் ‘சாலஞ்சர் ‘ [Space Shuttle, Challenger] ஃபிளாரிடா கனாவரல் முனை [Cape Canaveral, Florida] ஏவுதளத்திலிருந்து செங்குத்தாக எழுந்து, ஒரு நிமிடம் இயங்கி 50,000 அடி உயரத்தில் [சுமார் 10 மைல்] செல்லும் போது, திடாரென பழுது ஏற்பட்டு வானத்தில் வெடித்தது! விண்கப்பல் சுக்கு நூறாகப் போனதுடன், பயணம் செய்த ஏழு அண்டவெளி விமானிகள் [ஐந்து ஆடவர், இரு மாதர்] ஒருங்கே உயிரிழந்தனர்! பதினேழு ஆண்டுகளுக்குப் பின்பு மற்றுமோர் விண்வெளி மீள்கப்பல், கொலம்பியா [Space Shuttle Columbia] ஏவுதளம் நோக்கி இறங்கும் போது, எதிர்பாராது பயங்கர விபத்துக் குள்ளானது! சாலஞ்சர் மீள்கப்பலைப் போன்று, கொலம்பியா விண்கப்பலில் இறந்தவர், நால்வர் ஆடவர், இருவர் மாதர். முன்னது ஏவப்படும் போது ஒரு நொடியில் வெடித்தது! பின்னது தரைக்கு இறங்கும் போது சிறிது, சிறிதாய்ச் சிதைந்து, முடிவில் வெடித்தது!

ஐந்து விண்வெளிக் கப்பல்களில் சாலஞ்சர் வெடித்த பின் நான்காகி, இப்போது கொலம்பியா சிதைந்து மூன்று மீள்கப்பல்களாய் குறைந்து விட்டன! பிழைத்தி ருக்கும் மூன்று விண்கப்பல்களின் தலைவிதியும், எதிர்கால விண்கப்பல் பயணங்களின் பணிவிதியும், விபத்தின் காரணங்களை அறிந்த பிறகுதான் நிர்ணய மாகும். இதுவரை நான்கு மீள்கப்பல்களின் 111 விண்வெளிப் பயணங்களைச் சுமார் 21 ஆண்டுகள் நாஸா திட்டப்படித் திறம்படச் செய்து காட்டியுள்ளது! கொலம்பியா விண்கப்பல்தான் முதலில் கட்டப்பட்டுத் தயாரானது. 1981 ஆம் ஆண்டு முதல் 21 ஆண்டுகள் சீராய்ப் பணியாற்றிய விண்வெளி மீள்கப்பல், கொலம்பியா! அது 27 தடவை விண்வெளியில் ஏவப்பட்டு, விண்ணாய்வுகளை செவ்வனே முடித்து, வெற்றிகரமாகப் பூமியில் இறங்கி யுள்ளது. இருபத்தி எட்டாவது முறை ஏவிய போது, திட்டப்படி அண்டவெளியில் புகுந்து, 16 நாட்கள் விண்வெளிப் பணிகளை முடித்து, பூமிக்கு மீளும் போதுதான் தீவிரப் பழுதுகள் ஏற்பட்டு விபத்துக் குள்ளாகி, இறுதி 16 நிமிடங்களில் அது சிதைய ஆரம்பித்தது!

காலை 8-15 மணிக்கு [EST], இந்து மகாக் கடலைக் கடக்கும் போது, பயண அதிபதி ரிக் ஹஸ்பென்ட் [Commander Rick Husband] பறக்கும் விண்கப்பல் ‘சுற்றுவீதி முறிவு ‘ [Deorbit] செய்ய, ராக்கெட் எஞ்சிகளை ஒரு நிமிடம் இயக்கினார்! கொலம்பியா ஃபிளாரிடா தளத்தைத் தொட இன்னும் அரை மணி நேரம் ஆகும்.

விண்கப்பல் சுற்றுவீதி முறிவு: உயரம்: 170 மைல், வேகம்: 15900 mph, ஃபிளாரிடா தொடுதளம்: 12520 மைல் தூரம். பயண இடம்: இந்து மகாக் கடல்.

பூமண்டல மீட்சி [Re-entry]: விண்கப்பல் 180 டிகிரி திசை திரும்பி, முனை மூக்கு மேல் நோக்க, வெப்பம் தாங்கும் வயிற்றைக் காட்டி உராய்வுக் காற்றை எதிர்கொண்டு, பூமண்டல ‘மீட்சிக்கு ‘ [Re-entry] விண்கப்பல் முற்பட்டது. விண்கப்பல் 25 நிமிடங்கள் இருள்மயச் [Blackout] சூழலில் இறங்கியது! உயரம்: 48 மைல்; வேகம்: 16125 mph. ஃபிளாரிடா தொடுதளத் தூரம்: 3275 மைல்!

உச்சநிலை வெப்பத்தில் விண்கப்பல்: உயரம்: 42 மைல், வெப்ப நிலை: 20 நிமிடங்கள், வேகம்: 14520 mph. ஃபிளாரிடா தொடுதளம் : 1720 மைல் தூரம்.

பூமிக்கு மேல் 39 மைல் உயரத்தில் கொலம்பியா பயணம் செய்யும் போதுதான் பிரச்சனைகள் தோன்ற ஆரம்பித்தன! கொலம்பியா விண்கப்பல் 8-59 மணிக்கு [EST], ஃபிளாரிடா தொடுதளத்தில் இறங்குவதற்கு 16 நிமிடங்களுக்கு முன்பு டெக்ஸஸ் மாநிலத்தின் மீது வெடித்துச் சிதறியது!

விண்கப்பல் சிதைந்து போனதற்குக் காரணங்கள் என்ன ?

கொலம்பியா விண்கப்பலில் சுமார் 2.5 மில்லியன் உறுப்புகள் [Components] உள்ளன! அவற்றின் ‘உறுதிப்பாடு நிலை ‘ [Reliability Level] 99.9% என்று வைத்துக் கொண்டாலும், வலுவற்ற 2500 உறுப்புகளில் சில கோளாறாகி விண்கப்பல் விபத்துள்ளாக வாய்ப்புகள் எழலாம்! 2003 பிப்ரவரி முதல் தேதி விண்கப்பலின் மீட்சியின் போது, முதலில் இடது இறக்கையில் இருந்த ‘உஷ்ண உளவிகள் ‘ [Temperature Sensors] பழுதாகி, உஷ்ண அளவுகள் குறிப்பயண ஆட்சி மையத்துக்கு [Mission Control Centre] அனுப்பப் படாது சமிக்கை அறிவிப்புகள் தடைப்பட்டன! கொலம்பியா கனாவரல் முனை ஏவுதளத்தில் 2003 ஜனவரி 16 ஆம் தேதி ராக்கெட்டுகள் எறியத் துவங்கி, விண்கப்பல் செங்குத்தாக ஏறும் போது, எரிபொருள் புறக்கலனிலிருந்து விலகிக் கீழே விழுந்த ஓர் நுரைக் கவசம் [Foam Insulation] இடது இறக்கை மீது பட்டது! ஆனால் நாஸா பயண ஆணையாளர்கள் நுரைக் கவசத்தால் ஏற்பட்ட இறக்கை உடைசல், விண்கப்பல் சிதைவுக்குக் காரணமாக இருக்கவே முடியாது என்று உறுதியாக அறிவித்தனர்!

கொலம்பியாவின் 70% உடம்பில் சுமார் 27,000 செராமிக் வெப்பக் கவச ஓடுகள் [Ceramic Heat Shield Tiles] மனிதக் கரங்களால் ஒட்டப் பட்டுள்ளன! அவைதான் விண்கப்பல் மீட்சியின் போது [During Re-entry] பூமண்டலக் காற்று உராய்வில், கனல் பற்றி எறியும் வெப்பத்தைத் தாங்கி, விண்கப்பலைப் பாதுகாக்கின்றன! கவச ஓடுகள் யாவும் சிலிகா நார்களால் [Silica Fibres] ஆக்கப் பட்டு, செராமிக் பிசினால் [Glue] பிணைக்கப் பட்டவை. கீழே விண்கப்பல் வயிற்றுப் பகுதியில் மட்டும் 20,000 கவச ஓடுகள் [அளவு: 6 'x6 ', தடிமன்: 0.5 '-3.5 '] கைகளால் ஒட்டப் பட்டுள்ளன! விண்கப்பலின் மேலுடம்பு முதுகுப் பகுதியில் 7000 கவச ஓடுகள் மூடியுள்ளன. கவச ஓடுகள் யாவும் மிக நலிந்த பளுவைக் கொண்டவை! அவை வெப்பக் கனலை வெகு விரைவில் எதிரொளித்து அகற்றுபவை! 1260 C உஷ்ணத்தில் உள்ள கவச ஓடைத் தணல் அடுப்பிலிருந்து வெளியே எடுத்துக் கையில் தொட்டாலும் காயம் எதுவும் ஏற்படாது! விண்கப்பல் மூக்கிலும், இறக்கைகளின் பறப்பு முனைகளிலும் கவச ஓடுகள் கிடையா! அவற்றுக்குப் பதிலாக, உறுதி செய்யப்பட்ட கரிக்கட்டிகளால் [Reinforced Carbon] அவை மூடப்பட்டுள்ளன.

வெப்பம் மிகையாகத் தாக்கப் படும் பாகங்கள் மட்டும் தடித்த கவச ஓடுகளால் மூடப்படும்! விண்கப்பல் பயணத்தின் போது ஏற்படும் அதிர்வு, வெப்பம், குளிர்ச்சி ஆகிய வேறுபாடுகளால் சில கவச ஓடுகள் கழன்று விழுவதும் உண்டு! அவ்விதம் இடது இறக்கையின் கீழிருந்த சில கவச ஓடுகள் விலகி விழுந்து, வெப்பம் சூடேறியதால் உஷ்ண உளவிகள் பழுதடைந் திருக்கலாம்! கவச ஓடுகள் அற்றுப் போன இடங்கள் தீயால் எரிந்து போய், முதலில் இடப்பாகங்கள் உடைந்து, விண்கப்பலின் நேர்முகச் சீர்நிலைப்பாடு தடுமாறிக் கப்பல் பறப்புக் கட்டுப்பாடு முறிந்திருக்கலாம் என்று ஒரு கருத்து உலவி வருகிறது! அல்லது அண்டவெளிக் கற்கள், குப்பைகள் இடது இறக்கையைத் தாக்கி உடைத்திருக்கலாம்! வாயு சீரோட்டப் பறப்புக் கட்டுப்பாடு [Aerodynamic Flight Control] முறியவே, கப்பல் ஆட்டி அசைக்கப் பட்டு, கப்பலின் பல உறுப்புகள் உடைந்து சிதறிப் போகக் காரண மாயிருக்கலாம்!

இறுதியில் மிஞ்சிய விண்கப்பலும் வெடித்து முழுவதுமே சின்னா பின்னமாய்ப் போனது! பல இடங்களில், பல மாநிலங்களில் சிதறிய, கப்பலின் பாகங்களைச் சேர்த்து வைத்துக் கொலம்பியா விபத்தின் காரணத்தை உளவறிய, ஆய்வாளர் களுக்கு இன்னும் பல மாதங்கள் ஆகலாம்!



விண்வெளி மீள்கப்பலில் பயணம் செய்த தீர விமானிகள்

கொலம்பியா விண்கப்பல் ஆளுநர் ரிக் ஹஸ்பென்ட் அமெரிக்க விமானப்படை கெர்னல் [Air Force Colonel]. இருமுறை விண்கப்பலில் பயணம் செய்து அனுபவம் பெற்றவர். 1999 இல் அகில நாட்டு விண்ணிலைத்தின் [International Space Station] துணை விமானியாகப் பணியாற்றி முதன் முதல் சுற்று வீதியில் நகரும் விண்சிமிழுடன் இணைப்பு செய்து [Docking with Orbiting Outpost] காட்டியவர்! அவரது அண்டவெளிக் குழுவினர் ஆறு ஆண்டுகளுக்குப் பின் முதன் முதலாக 16 நாட்கள் நீண்ட விஞ்ஞானச் சோதனைகளை வெற்றிகரமாக முடித்தனர்! திருமண மாகி மனைவியும், இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

வில்லியம் மெக்கூல் கொலம்பியாவின் அடுத்த விமானி. அமெரிக்கக் கடற்படை ஆளுநர், மற்றும் கடற் படையின் ஒரு விமானி [U.S. Navy Aviator]. திருமண மானவர். அவருக்கு மனைவியும் மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

Husband, Ramon, McCool



இரண்டு பெண் விமானிகளில் ஒருவரான, லாரல் கிளார்க் அமெரிக்க கடற்படை ஆளுநர், மற்றும் கீழ்க்கடல் மருத்துவ டாக்டர் [U.S. Navy Undersea Medical Officer], கடற்படை விமான அறுவை நிபுணர் [Flight Surgeon]. கணவரும் ஓய்வெடுத்த கடற்படை விமான அறுவை நிபுணர் டாக்டர், நாஸாவில் பதவி வகிப்பவர். லாரலுக்கு கொலம்பியா அனுபவம் முதல் பயணம்! மேலும் முடிவாகப் போன இறுதிப் பயணம்! அவர்களுக்கு ஒரு புதல்வன் உண்டு!

கொலம்பியா பளுதாங்கி நிர்வாகி [Payload Commander], மைக்கேல் ஆன்டர்ஸன் அமெரிக்க விமானப்படை லெஃப்டினென்ட் கெர்னல். 80 விண்வெளி விஞ்ஞானச் சோதனைகள் நடத்த எல்லா வித ஏற்பாடுகளும் செய்ய வேண்டியது அவரது பணி.

விண்வெளிச் சிறப்புநர் டேவிட் பிரெளன் ஓர் அமெரிக்கக் கடற்படை விமான அறுவை மருத்துவர். கொலம்பியா அவரது முதல் பயணம்.

Brown & Anderson



இலான் ராமோன் இஸ்ரேலிலிருந்து வந்து கொலம்பியாவில் பங்கெடுத்த முதல் விண்வெளி விமானி. இஸ்ரேல் விமனப்படை கெர்னல். அவருக்கு மனைவி, மூன்று புதல்வர், ஒரு புதல்வி உள்ளனர்.

பாரதத்தில் பிறந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை

நாற்பத்தி ஒன்று வயதான கல்பனா செளலா ஓர் பறப்பியல் எஞ்சினியர் [Flight Engineer]. பாரதத்தில் பிறந்து, அமெரிக்கக் குடிமகள் ஆன கல்பனா நாஸா விண்வெளி விமானியாகி, அண்டவெளித் தேடலில் உயிரைத் தியாகம் செய்தவர்! முதல் இந்திய விண்வெளி விமானி ராகேஷ் ஷர்மா [Rakesh Sharma] ரஷ்ய விண்சிமிழில் பயணம் செய்த பின், முதல் பெண் விண்வெளி விமானி என்று பெயர் பெற்றவர், கல்பனா! இரண்டாவது இந்திய விண்வெளி விமானி எனினும், அமெரிக்க விண்கப்பலில் இரண்டு முறை அண்டவெளியைச் சுற்றி வந்த முதல் விண்வெளித் தீர நங்கை என்று புகழடைந்தவர்!

Dr. Clark



‘முதன் முதல் இந்தியத் தபால் பயண விமானத்தை செலுத்திய ஜே.ஆர்.டி. டாடா [J.R.D. Tata] அவர்களே என்னைக் கவர்ந்தவர். நான் பறப்பியலைப் பின்பற்ற அவரே காரண கர்த்தா ‘ என்று கல்பனா செளலா ஒரு முறைக் கூறியுள்ளார். கல்பனா இந்திய தேசத்தின் விண்வெளி வீராங்கனை! டில்லிக்கு வடக்கே 75 மைல் தூரத்தில் உள்ள கர்நல் [Karnal] என்னும் ஊரில் 1962 இல் கல்பனா பிறந்தார். தாகூர் பல் நிகேதன் பள்ளியில் [Tagore Bal Niketan School] கல்பனா கல்வி பயின்றார். கல்பனா சிறு வயதில் சைக்கிள் போட்டியில் சகோதரனுக்கு இணையாக ஓட்டிக் காட்டியவர்! இருவரும் வெகு தூரம் சைக்கிளில் போய் முடிவில் ஓர் விமானப் பயிற்சிக் கூடத்தின் அருகே வந்து நிற்பார்கள்! விமானங்கள் ஏறுவதையும் இறங்குவதையும் பல தடவை வேடிக்கை பார்த்துப் பிறகு அந்த வேட்கையே கல்பனாவை விமானத்துறைப் பொறியியல் பயிலத் தூண்டி விட்டதாக, அவர் ஒரு சமயம் கூறி யிருக்கிறார்! உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போதே, தானொரு விண்வெளி எஞ்சினியராக [Aerospace Engineer] வேண்டும் என்ற மன உறுதியில் இருந்தார்!

Kalpana Chawla



1982 இல் பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் விமானவியல் எஞ்சினியரிங் படித்த ஆடவர் மத்தியில் பயின்ற ஒரே ஒரு பெண் மாணவராய், B.Sc. [Aeronautical Engineering] பட்டத்தைப் பெற்றார். அதற்குப் பிறகு அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்து டெக்ஸஸ் பல்கலைக் கழகத்தில் [University of Texas] சேர்ந்து, 1984 ஆம் ஆண்டு M.Sc. [Aerospace Engineering] பட்டத்தைப் பெற்றார். அப்போது அமெரிக்கக் குடியினர் [U.S. Citizen] தகுதியும் கல்பனாவுக்குக் கிடைத்தது. பிறகு 1988 இல் கொலொராடோ பல்கலைக் கழகத்தில் [University of Colorado] மேற்படிப்பைத் தொடர்ந்து, தனது 26 ஆம் வயதில் ஆர்வமோடு படித்து Ph.D. [Aerospace Engineering] பட்டத்தையும் அடைந்தார்! கல்பனா ஓர் அமெரிக்கரைத் திருமணம் செய்து கொண்டார்! அவரது கணவர் ஜீன் பியர் ஹாரிஸன் [Jean-Pierre Harrison] ஒரு விமானப் பயிற்சியாளர் [Flying Instructor].



முதலில் காலிஃபோர்னியாவில் உள்ள நாஸாவின் அமெஸ் ஆய்வு மையத்தில் [Ames Research Center, Moffit Field] காற்றடிப்பில் ‘உயர் வினைபுரியும் விமானம் ‘ [Air Flows around High Performance Aircraft] எப்படி இயங்கும் என்று சோதனைகள் செய்தார். 1994 டிசம்பரில் நாஸாவின் விண்வெளி மீள்கப்பல் குறிப்பணிப் [Space Shuttle Mission] பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார். அப்பயிற்சிக்குப் பின் கல்பனா விண்வெளிக் கப்பல் பயணங்களில் சிறப்பநராகப் [Mission Specialist] பணி புரிய வேண்டும். 1997 இல் திட்ட மிட்ட அவரது முதல் கொலம்பியா விண்வெளிக் குறிப்பணி STS-87 [Space Mission STS-87]. STS-87 குறிப்பணி நாஸா நான்காவது முறை செய்யும், நுண்ணீர்ப்பியல் பளுதூக்கிப் பயணம் [Microgravity Payload Flight]. அப்பணியில் கல்பனா ‘சுய நகர்ச்சிக் கரம் ‘ இயக்குநராக [Robotic Arm Operator] வேலை செய்து, 376 மணி நேரங்கள் [சுமார் 15 நாட்கள்] அண்டவெளி அனுபவம் பெற்றுள்ளார். முதல் பயணத்தில், விஞ்ஞானத் துணைக்கோள் [Science Satellite] ஒன்று கட்டு மீறிக் கடந்து செல்லக் கைத்தவறு செய்ததால், கல்பனா பழிக்கப் பட்டார். உடனே அருகில் இருந்த மற்ற விமானிகள் அண்டவெளி நீச்சல் அடித்து [Space Walk], விலகிச் செல்லும் துணைக் கோளைக் கைப்பற்றினார்!



1997 முதல் கொலம்பியா பயணம் முடிந்த பின்பு, கல்பனா இமய மலைத் தொடர்களைக் கீழே பார்த்ததாகவும், கங்கை நதி கம்பீரமாகப் போவதைக் கண்டு களிப்படைந்த தாகவும் ஓர் இந்தியச் செய்தி நிருபரிடம் கூறினார்! ஆஃப்ரிக்கா பாலைவன மாகத் தோன்றுவதாகவும், அதில் நைல் நதி ஓர் நரம்பு போல் தெரிவதாகவும் நிருபரிடம் சொல்லி யிருக்கிறார்!

2003 ஜனவரி 16 ஆம் தேதி அவரது இறுதிப் பயணம் கனாவரல் முனை ஏவுதளத்தில் தயாராக இருந்த கொலம்பியா விண்வெளிக் கப்பலில் துவங்கியது! விபத்துக் குள்ளான கொலம்பியாவின் 28 ஆவது முடிவுக் குறிப்பணி STS-107 [Space Mission STS-107]! அதன் விமான ஆளுநர் ரிக் ஹஸ்பன்ட் [Commander Rick Husband] குழுவினருள் ஒரு குறிப்பணி சிறப்புநராகப் [Mission Specialist] பணி புரிந்தார்!

கொலம்பியா பயணத்தில் கல்பனா புரிய வேண்டிய பணிகள்

1. விண்கப்பலின் ‘பளுதாங்கி முற்றத்தில் ‘ [Payload Bay] பலவித அண்டவெளிச் சோதனைகள் புரியச் சாதனங்களை அமைக்க வேண்டியது.

2. விண்வெளியில் நுண் ஜீவிகள் வளர்ச்சிச் சோதனை [Astroculture (Bacteria)]

3. முற்போக்கு புரோடான் படிகச் சாதன ஆய்வு [Advanced Protein Crystal Facility]

4. வாணிபப் புரோடான் வளர்ச்சிச் சோதனை [Commercial Protein Growth]

5. உயிர்ப் பொறியியல் காட்சி முறை ஏற்பாடு [Biotechnology Demonstration System]

6. எட்டு உயிர்த்தொகுப்புச் சோதனைகள் [Biopack ESA, Eight Experiments]



7. சீர் போக்குப் புகைத் தணல் அடுப்புச் சோதனை [Combustion Module with Laminar Soot Processes]

8. ஆவிநீர் தீ அணைப்பு ஆராய்ச்சி [Water Mist Fire Suppression]

9. கீழ் லூயிஸ் எண்ணில் தீக்கோள அமைப்புச் சோதனைகள் [Structures of Flame Balls Experiments at Low Lewis-number]

10. தானியம் ஒத்த பண்டங்களின் யந்திரவியல் [Mechanics of Granular Materials]

11. விண்வெளியில் அழுத்த வாயுவின் ரசாயன வடியல் முறைச் சோதனைகள் [Vapour Compression Distillation Flight Experiments]

12. ஸியோலைட் படிக வளர்ச்சி உலை ஆய்வு [Zeolite Crystal Growth Furnace]



விண்வெளி மீள்கப்பல்களின் பிரச்சனைகள், எதிர்காலப் பயணங்கள்

1960-1972 ஆண்டுகளில் நாஸா வெற்றிகரமாக சந்திர மண்டலப் பயணங்களை நிகழ்த்திய அபொல்லோ திட்டங்கள் யாவும் ஓய்ந்த பின்பு, இரண்டாவது கட்ட விண்வெளி மீள்கப்பல் [Space Shuttle] திட்டம் 1977 இல் உருவாகி 1981 ஆம் ஆண்டிலிருந்து பறப்பியல் படலம் ஆரம்பமானது!

விண்வெளி மீள்கப்பல் திட்டத்தில் ஆரம்பத்திலிருந்தே டிசைன் தவறுகள், நிதிச் செலவு மீறல் [Cost Overruns], தயாரிப்புத் தாமதங்கள், கள்ளத்தனம் [Fraud], நிர்வாகக் கோளாறுகள், இப்படி பல இடையூறுகள் ஏற்பட்டு, முதல் பயிற்சிப் பயணம் தொடங்கவே சுமார் பத்தாண்டுகள் ஓடிவிட்டன! ஒவ்வொரு விண்வெளி மீள்கப்பல் பயணத்துக்கும் [ஏவுதல், பறப்புக் கண்காணிப்பு, இறங்குதல்] சுமார் 250 மில்லியன் டாலர் செலவாகும் என்று அறியப்படுகிறது! ஐந்து விண்வெளிக் கப்பல்கள் உள்ள போது, ஆண்டுக்கு 60 அண்டவெளிப் பறப்புகளைத் நாஸா முதலில் திட்டமிட்டி ருந்தது! ஆனால் சராசரியாக நடந்தது, ஆண்டுக்கு 5 அல்லது 6 பயணங்களே! எஞ்சிய மூன்று விண்கப்பலில் இனிப் பயணங்கள் தொடருமாகில், அவற்றுக்கு ஒப்பியவாறு குறைந்து ஆண்டுக்கு 2 அல்லது 3 ஆகச் சிறுத்து விடலாம்!





1986 இல் ஏற்பட்ட சாலஞ்சர் விபத்தின் காரணத்தை உளவு செய்த போது, நாஸா அமெரிக்கக் காங்கிரஸிடம் மறைத்த, திரித்துக் கூறிய பல செய்திகள் தெரிய வந்தன! விண்கப்பல் பயணத்தின் மெய்யான செலவு கணக்குகள், திட்டங்களின் நிகழ்ச்சி நிரல்கள், தீவிரத் தகவல்கள் ஆகியவை மறைக்கப் பட்டிருப்பதுடன், பல பில்லியன் டாலர் விரயமாகி யிருப்பதும், நூற்றுக் கணக்கான விதி மீறல்கள் [Federal Code Violations] விண்கப்பல் அமைப்பாடில் விளைந்திருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டன!

சென்ற 16 ஆண்டுகள் [1986-2002] விண்கப்பல்களின் குறிப்பணிகள் சிறப்பாகவும், பொறுப்பாகவும் பலமுறை நிறைவேறி யுள்ளதை மெச்சத்தான் வேண்டும்! புதிய ஆய்வுத் துணைக்கோள் ஏவுதல், செயலற்ற துணைக் கோள்களைக் கைப்பற்றல், விண்வெளி நிலையங்களைச் செப்பமிடல், ஹப்பிள் தொலைநோக்கி ஏவியது, பலமுறைப் புதுப்பித்தது, செப்பமிட்டது, வியாழன், வெள்ளி, சூரியன் போன்ற அண்டக் கோள்களுக்கு விண்ணாய்வுச் சிமிழ்களை அனுப்பியது யாவும் விண்வெளி வரலாற்றில் பொன்னெழுத்தில் பொறிக்க வேண்டிய நிகழ்ச்சிகளாகும்! அண்டவெளியில் உருவாகி, மூன்று விமானிகளோடு பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கும் விண்ணிலையத்துடன் தொடர்பு கொள்ளவும், அடுத்து இனி முடிக்க வேண்டிய பல விண்பணிகளைத் துவங்கவும் விண்கப்பல் பயணங்களை மீண்டும் ஆரம்பிக்கத்தான் வேண்டும்! விண்கப்பல் குறிப்பணிகளில் பல தளங்களில் வேலை செய்து வரும் 12,000 அமெரிக்க நபர்களின் வேலைகளைப் பாதுகாப்புக் காகவும், மிஞ்சிய மூன்று விண்கப்பல்கள் மீண்டும் உயிர்த்து எழுந்து பறக்கத்தான் வேண்டும்!



கொலம்பியா இழப்பு போன்று 1986 இல் கென்னடி விண்வெளி மையத்தில் ஏவிய போது வெடித்த சாலஞ்சர் விண்கப்பல் ஏற்கனவே, ஏழு உயிர்களையும், 25 பில்லியன் டாலரையும் விழுங்கி யிருக்கிறது! 100 குறிப்பணிப் பயணங்களுக்கு டிசைன் செய்யப் பட்ட கொலம்பியா, 28 ஆவது பயணத்தை முடிக்காமலே, மூச்சு நின்று போனது, உலக விஞ்ஞானிகளுக்கும், எஞ்சினியர்களுக்கும் பெரு வியப்பை மூட்டுகிறது! 2003 இல் நிகழ்ந்த கொலம்பியா விண்கப்பல் சிதைவில் ஏழு மாந்தர் உயிரிழந்ததுடன், 100 விண்வெளிச் சோதனை விளைவுகள் மாய்ந்துபோய், 25 பில்லியன் டாலர் தயாரிப்புத் தொகையும் மறைந்து போனது! எல்லா இழப்புகளையும் விட, இறந்து போன ஏழு உன்னத மனித உயிர்களுக்கு ஈடான தொகை எத்தனை, எத்தனை பில்லியன் டாலர் என்பது கற்பனையில் கூட கணிக்க முடியாத அளவுத் தொகையாகும்!

Sunday, August 21, 2011

செயற்கைக்கோள் சுற்றுப்பாதை - ஒரு அறிவியல் அலசல்

முதலில் செயற்கைக்கோள் என்றால் என்ன என்று பார்க்கலாம். ஒரு பெரிய பொருளை (object) மற்றொரு சிறிய பொருள் சுற்றி வந்தால் அதை ஆங்கிலத்தில் சாட்டிலைட் என்று அழைகின்றனர். நம் பூமி சூரியனின் சாட்டிலைட், நிலவு பூமியின் சாட்டிலைட். இவைகள் நேச்சுரல் சாட்டிலைட் என்று அழைக்கபடுகின்றன. மனிதன் செயற்கையாக பூமியின் சுற்று பாதையில் சுழல விடும் பொருளை ஆர்டிபிசியல் சாட்டிலைட் அல்லது செயற்கைக்கோள் என்று அழைக்கிறோம். ஆனாலும் பொதுவாக சாட்டிலைட் என்று ஆர்டிபிசியல் சாட்டிலைட்டை மட்டுமே கூறுகின்றனர். பூமியை சுற்றி ஆயிரக்கணக்கில் செயற்கைகோள்கள் சுற்றி வருகின்றன. அவை தொலை தொடர்பு, வானிலை பற்றி தகவல் அறிய, தொலைகாட்சி நிகழ்ச்சிகள் காண என பல்வேறு வகைகளில் நம் வாழ்வில் உதவுகின்றன. இன்றைய காலகட்டத்தில் செயற்கைக்கோள் நம் அன்றாட வாழ்வில் ஒரு இன்றியமையாத அங்கமாக மாறிவிட்டது.

சரி செயற்கைக்கோள் பற்றி ஒரு சிறிய விளக்கம் பார்த்தாகிவிட்டது, இப்போது சுற்று பாதை என்றால் என்ன என்று பார்க்கலாம். சுற்றுப்பாதையை பற்றி புரிந்துகொள்ள முதலில் க்ராவிடி எனப்படும் ஈர்ப்பு விசையை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். ஈர்ப்பு விசை என்பது அனைத்து பொருட்களையும் தன்னுள் இழுத்துகொள்ளும் ஒருவித சக்தி ஆகும். இந்த அண்டத்தில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் ஈர்ப்பு சக்தி உள்ளது. இந்த சக்தி அந்தந்த பொருளில் உள்ள நிறை (Mass) கொண்டு மாறுபடும். உதாரணத்திற்கு உங்களுக்கு என்று ஒரு ஈர்ப்பு களம் உண்டு. உங்கள் அருகில் இருக்கும் மேஜை நாற்காலி போன்ற பொருட்களுக்கும் ஈர்ப்பு களம் உண்டு. ஆனால் உங்களுக்கும் நாற்காலிக்கும் இடையே உள்ள ஈர்ப்பு விசை மிகவும் வலிமையற்றதாக உள்ளதால் அதை உணர முடிவதில்லை. பூமி போன்ற பெரிய கோளின் ஈர்ப்பு விசை மிகவும் வலிமையானது என்பதால் அதை உணர முடிகிறது. பூமி தன்னை சுற்றி உள்ளை அனைத்தையும் அதன் மையத்தை நோக்கி ஈர்த்துக்கொண்டிருகிறது. ஒரு கல்லை வானத்தை நோக்கி தூக்கி போட்டால் அது வேகமாக கீழே வந்து விழுகிறது. அந்த கல் வந்து விழும் விசையை F=mg என்ற சூத்திரத்தால் குறிக்கின்றனர். இதில் m என்பது அந்த பொருளின் நிறை, g என்பது புவிஈர்ப்பு முடுக்கம் (acceleration due to gravity). பூமியில் கடல் மட்ட அளவில் புவிஈர்ப்பு முடுக்க அளவு 9.81 m/s 2ஆகும்.

ஒரு கல்லை வேகமாக உங்கள் எதிரே வீசினால் அது சிறிது தூரம் சென்று கீழே விழுகிறது. உதாரணத்திற்கு கீழே உள்ள படத்தில் ஓரளவு விசையுடன் வீசப்பட்ட கல் A என்று குறிக்கப்பட்ட இடத்தில் விழுகிறது. மேலும் சற்று விசையுடன் வீசினால் B என்று குறிக்கப்பட்ட இடத்தில் விழுகிறது. கல் வீசப்படும் விசை மேலும் மிக அதிகமாக கூட்டினால் C எனபடும் சுற்றுப்பாதையில் பூமியை சுற்றி வருகிறது. அப்படி ஒரு சுற்று பாதையில் சுற்ற முதலில் சரியான விசையுடன் கல்லை வீசவேண்டும்.



இங்கு A மற்றும் B -ல் கல் விழுவதற்கு காரணம் காற்றின் உராய்வால் வேகம் குறைந்து பூமியின் புவிஈர்ப்பு விசையால் கீழே இழுக்கபடுகிறது. அதே நேரத்தில் அந்த கல் வேகமாக எறியப்பட்டு பூமியின் வளிமண்டலத்தை தாண்டி வெளியே சென்று விட்டால் அங்கு தடுப்பதற்கு காற்று மண்டலம் இல்லாததால் அது சீராக ஒரே நேர்கோட்டில் சென்று கொண்டிருக்கவேண்டும். இது நியூட்டனின் முதலாம் விதி. ஒரு பொருள் ஒய்வு நிலையில் இருக்கும் போது அதே ஒய்வு நிலையில் இருக்கும் அல்லது அந்த பொருள் நகர்ந்துகொண்டிருந்தால் அதே வேகத்தில் மற்றும் திசையில் நகர்ந்துகொண்டிருக்க வேண்டும். எதாவது ஒரு விசை வெளியில் இருந்து அந்த பொருளை தாக்காதவரை அதன் நிலை அப்படியே இருக்கவேண்டும். இதன் படி வளிமண்டலத்தை தாண்டி வீசி எறியப்பட்ட கல் தடுப்பதற்கு வேறு விசை இல்லாததால் நேராக செல்ல முயலும். ஆனால் பூமியின் புவிஈர்ப்பு அந்த கல்லை கீழே இழுக்கும். அதனால் திசை மாறி கல் கீழே ஆனால் வேகம் குறையாமல் பயணிக்கும். கீழே உள்ளே படத்தில் உள்ள புள்ளி அதன் வேகத்தில் நேராக செல்ல முயற்சிகிறது. ஆனால் பூமியின் ஈர்ப்பு விசையால் திசை மாறி பயணிக்கிறது. இது தொடர்ந்து நடப்பதால் சுற்றுப்பாதை உருவாகிறது.



இப்படி புவிஈர்ப்புக்கும் கல் சென்று கொண்டிருக்கும் வேகத்திற்கும் இடை நடக்கும் போர் தான் சுற்றுப்பாதை உருவாக காரணம். இங்கு நான் எளிமை கருதி வளிமண்டலத்தை தாண்டி கல்லின் வேகத்தை தடுப்பதற்கு எதுவும் இல்லை என்று கூறியிருக்கிறேன். வளிமண்டலத்தை தாண்டியும் கண்ணுக்கு தெரியாத பல சங்கதிகள் வேகத்தை தடுக்க உள்ளது ஆனாலும் அது காற்றின் உராய்வு போன்று வலிமையானது அல்ல. இப்படி உருவாகும் சுற்றுப்பாதை வட்டமாகவோ நீள் வட்டமாகவோ எறியப்பட்ட வேகத்தை பொருத்து அமைகிறது.

இந்த பாணியிலேயே செயற்கைக்கோள் சுற்றுப்பாதையில் விடப்படுகிறது. அதை கொண்டு சென்று சுற்றுப்பாதையில் விட ராக்கெட்டை பயன்படுத்துகின்றனர். பொதுவாக சுற்றுப்பாதையில் எறியப்பட்ட செயற்கைக்கோள் அதன் பாதையில் சீராக சென்று கொண்டிருக்கும், ஆனால் சில நேரங்களில் வளிமண்டலத்தின் ஈர்ப்பால் பாதை மாறி கீழே வர சாத்தியம் உண்டு. அது போன்ற நேரங்களில் சிறிது உந்துதல் கொடுத்து மீண்டும் சரியான சுற்றுப்பாதைக்கு கொண்டு செல்ல முடியும்.

விண்வெளியின் புதிர்கள்

விண்வெளியின் புதிர்களை அறிவதில் மனித குலத்துக்கு எப்போதுமே ஆர்வம் இருந்து வந்துள்ளது. சுமார் 1825 ஆண்டுகட்கு முன்பு "உண்மை வரலாறுகள் (True Histories)" என்ற தலைப்பில் லூசியான் என்ற கிரேக்க நையாண்டி எழுத்தாளர் ஒரு கற்பனை நூலை எழுதினார். அக்காலத்தில் நிலவி வந்த குற்றங்குறைகளின் அடிப்படையில் முழுக்க முழுக்கப் பொய்யும் கற்பனையும் கலந்த நூலாக அது விளங்கியது. கதிரவனுக்கும், நிலவுக்கும் சென்று பயணம் செய்யும் கற்பனைக் கதை அது.

அடுத்து வந்த பல நூற்றாண்டுகளில், விண்வெளி பற்றிக் குறிப்பிடத் தகுந்த நூல் எதுவும் வெளி வரவில்லை. இருப்பினும், நிலவைப் பற்றியும், விண்மீன்களைப் பற்றியும், அவற்றின் புதிர்களைப் பற்றியும் விளங்கிக் கொள்ள மக்கள் முயன்றே வந்துள்ளனர்.

நிக்கலஸ் கோபர்நிகஸ் என்ற போலந்து நாட்டு வானியல் வல்லுநர் தன்னுடைய ஆய்வுகளின் முடிவில், இந்த அண்டத்தின் மையத்தில் சூரியன் இருப்பதாகவும், இப்புவி ஒரு கோள் என்றும் கூறினார். இத்தாலி நாட்டு வானியல் அறிஞர் கலிலியோ 1610-ல் ஒரு தொலைநோக்கியைக் கண்டுபிடித்தார். இதன் வாயிலாக விண்வெளியையும், நிலவின் மேற்பரப்பையும் நெருக்கமாகப் பார்க்க முடிந்தது.

நிலவைப் பற்றியும், பிற கோள்களைப் பற்றியும் பல கண்டுபிடிப்புகளைக் கலிலியோ கண்டறிந்து வெளியிட்டார். அவரது கண்டுபிடிப்புகள் மக்களால் வரவேற்கப்படவில்லை. எனினும், ஒரு சில அறிஞர்கள் மட்டும் அவரது கருத்துகளால் ஈர்க்கப்பட்டனர். அப்போது முதலே விண்வெளிப் பயணம் பற்றிய முயற்சிகளில் அறிவியல் அறிஞர்கள் ஆர்வம் காட்டி வந்தனர் எனலாம்.

வில்கின்ஸ் என்னும் இங்கிலாந்து நாட்டு எழுத்தாளர் 1638-ல் ஒரு நூல் எழுதினார். அதில் நிலவுக்குப் பயணம் செய்ய 4 வழிகள் இருக்கக் கூடும் எனக் குறிப்பிட்டார். முதலாவது வழியில், தெய்வீக சக்தி ஒன்று மனிதனை நிலவுக்கு அழைத்துச் செல்லக் கூடும். இரண்டாவது, ஆற்றல் மிக்க மிகப் பெரிய பறவைகள் துணையுடன் நிலவுக்குப் பயணம் மேற்கொள்ள முடியும். அடுத்ததாக மிகப் பெரிய இறக்கைகளைக் கட்டிக் கொண்டு மனிதனே நிலவிற்குப் பறந்து செல்லலாம். நான்காவதாக, பறக்கும் எந்திரம் ஒன்றைக் கண்டுபிடித்து, அதில் அமர்ந்து நிலவுக்குச் செல்லலாம். இவையே அவர் கூறிய 4 வழிகள்.
பின்னர் ஐசக் நியூட்டன் விண்வெளி பற்றிப் பல அரிய உண்மைகளைக் கண்டறிந்து வெளியிட்டார். அவரது இயக்க விதிகள் (laws of motion) புதியதோர் அறிவியல் சிந்தனையை உலகிற்கு அளித்தது. புவியை விட்டு உயரே செல்லச் செல்ல, புவியின் ஈர்ப்பு விசை குறைந்து கொண்டே போகும் என்பதை அவர் நிரூபித்தார். மேலும் அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களும், விண்மீன்கள் முதற்கொண்டு சின்னஞ் சிறு துகள்கள் வரை அனைத்தும் ஒன்றை ஒன்று கவர்ந்து இழுக்கும் ஆற்றல் உடையவை என்றும், அக்கவர்ச்சி விசையே ஈர்ப்பு விசை எனவும் நிரூபித்தார்.

விண்வெளிப் பயணத்தில் நியூட்டனின் ஈர்ப்புவிசை விதிக்கு முக்கிய பங்கு உண்டு. இவ்விதியின் அடிப்படையிலேயே, புவியின் கவர்ச்சி விசையிலிருந்து விண்வெளி ஓடத்தின் தப்பித்தல் திசை வேகம் தீர்மானிக்கப்படுகிறது. மேலும், நியூட்டன் கண்டுபிடித்த மூன்று இயக்க விதிகளும் விண்வெளிப் பயணத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன.

சுமார் 475 ஆண்டுகட்கு முன்பு வான்-ஹூ என்ற சீனர் நெருப்பு ஏவுகணை (fire rocket) ஒன்றைத் தயாரித்தார். நாற்காலி வடிவ ஊர்தி ஒன்றில் 47 ஏவுகணைகளில் வெடிப் பொருளை நிரப்பி அது உருவாக்கப்பட்டது. இதன் மீது அமர்ந்து கொண்டு விண்வெளியில் பறக்க இயலும் என அவர் நம்பினார். ஆனால் ஏவுகணைகளில் தீப்பற்றியவுடனே, அவர் உயரே தூக்கி எறியப்பட்டு, அதே வேகத்தில் தரையில் விழுந்து உயிர் இழந்தார்.

வான்-ஹூ அவர்களின் ஆய்வு தோல்வியில் முடிந்தாலும், அறிவியல் அறிஞர்கள் விண்வெளிப் பயணத்திற்குத் தகுதியான ஊர்தியைத் தயாரிக்கும் முயற்சியைக் கைவிடவில்லை. வில்லியம் காங்கிரேவ் என்ற இங்கிலாந்து நாட்டுப் போர்ப்படை அதிகாரி 1808ஆம் ஆண்டு துப்பாக்கி ரவையை ஏந்திச் செல்லும் ஏவுகணைகளைத் தயாரிக்கத் துவங்கினார். இத்தகைய ஏவுகணைகள் கடற் சண்டையில் பெரும் வெற்றியை ஈட்டித்தரும் என்று அவர் நம்பினார். அவர் கண்டுபிடித்த இவ்வகை ஏவுகணைகள் 1812-ல் அமெரிக்காவுடன் நடந்த சண்டையில் பயன்படுத்தப்பட்டன.

ஏவுகணையைப் பயன்படுத்தி அண்டவெளியை ஆய்வு செய்வது பற்றிய நூல் ஒன்றை கான்ஸ்டான்லின் சிலோவ்ஸ்கி என்ற இரஷ்ய நாட்டு அறிஞர் 1898-ல் எழுதி வெளியிட்டார். விண்வெளிப் பயணத்திற்குப் புதியதோர் துவக்கமாக இந்நூல் விளங்கியது.

அமெரிக்க-ஜெர்மன் நாடுகளின் விஞ்ஞானிகள் ஒன்றிணைந்து திரவ எரிபொருளைப் பயன்படுத்திச் செலுத்தும் ஏவுகணைகளை 1920-ல் உருவாக்கினர். முன்பு சொல்லப்பட்ட இரஷ்ய விஞ்ஞானியும் திரவ எரிபொருளைப் பற்றிக் கூறி இருந்தார். ஆயினும் அப்போது அவர் கருத்துக்கு அவ்வளவாக முக்கியத்துவம் தரப்படவில்லை.ஏவுகணை வடிவமைப்பில் அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் கோடர்ட் என்பவரும் முக்கிய பங்காற்றினார். அவரது முயற்சியால் துப்பாக்கி ரவையை ஏந்திச் செல்லும் ஏவுகணை உருவாக்கப்பட்டது. மேலும் திரவ எரிபொருளால் இயங்கும் ஏவுகணையிலும் அவர் ஆர்வம் காட்டினார். திட எரிபொருளை விட, திரவ எரிபொருள் அதிக ஆற்றல் வழங்குவதாக அவர் கண்டறிந்தார்.

கோடர்ட் பயன்படுத்திய திரவ எரிபொருளானது, பெட்ரோலில் இருந்து வடித்தெடுக்கப்பட்ட கேசொலின் (Gasoline) ஆகும். இந்த கேசொலினை எரிக்கத் திரவ உயிர்வளி (oxygen) பயன் படுத்தப்பட்டது. வளிம நிலையிலுள்ள உயிர்வளியானது அழுத்தத்தினால் குளிர்விக்கப்பெற்று திரவ நிலைக்கு மாற்றப்பட்டது. இதனை "லாக்ஸ் (lox)" எனக் கூறினர்.

திரவ எரிபொருளைப் பயன்படுத்தி இயக்கப்பட்ட முதலாவது சோதனை ஏவுகணையை கோடர்ட் 1926-ல் செலுத்தினார். ஆனால் அந்த ஏவுகணை அதிக உயரம் செல்லவில்லை. எனினும் 1929-ல் மேலும் ஒரு ஏவுகணை அவரால் செலுத்தப்பட்டது. அது சுமார் 90 அடி உயரம் விண்ணில் சென்று, கட்டுப்பாடு குறைவு காரணமாகத் தரையில் விழுந்துவிட்டது. சுழலாழிக் கருவியைப் (gyroscope) பயன் படுத்தி இந்தப் பிரச்சினையையும் கோடர்ட் தீர்த்து வைத்தார். சுழலாழிக் கருவி என்பது விரைந்து சுழலும் ஒரு சக்கரம்; இச்சக்கரத்தின் அச்சு ஒரு குறிப்பிட்ட திசையில் எளிதாகத் திரும்பக் கூடியது.

கோடர்ட் செலுத்திய இறுதி ஏவுகணை, மணிக்கு 550 கி.மீ. வேகத்தில், விண்வெளியில் சுமார் 1.25 மைல் தூரம் சென்றது. இரண்டாம் உலகப் போரின் போது அவர் அமெரிக்கக் கடற்படையில் சேர்ந்தார். குண்டுகளைப் பொழியும் போர் விமானங்களை மிகச் சிறிய இடத்திலிருந்து விண்ணுக்குச் செலுத்தக் கூடிய துணை உந்து கலங்களையும் கோடர்ட் வடிவமைத்தார். மேலும் அவர் வி-1, வி-2 என்ற ஏவுகணைகளைப் போரில் பயன்படுத்துவதற்காக ஜெர்மனியில் உருவாக்கினார். இவற்றின் முன்னேறிய வடிவங்களே எதிர்காலத்தில் விண்வெளி ஓடங்களாக உருவெடுத்தன.

வார்னர் வான் பிரான் (Warner Von Braun) என்ற ஜெர்மன் நாட்டு ஏவுகணைப் பொறியாளர் இரண்டாம் உலகப் போரின் போது தமது நாட்டை விட்டு அமெரிக்காவுக்குக் குடி பெயர்ந்தார். அங்கு அவர் விண்வெளி ஆய்வுக் குழுவுக்குப் பொறுப்பேற்றார். அவர் தலைமையில்தான் எக்ஸ்ப்ளோரர்-1 என்ற துணைக்கோள் (Satellite) வெற்றிகரமாக விண்வெளியில் செலுத்தப்பட்டது. அடுத்து அவரது மேற்பார்வையில் சாட்டர்ன் (Saturn) ஏவுகணையும் தயாரிக்கப்பட்டது. முதல் முறையாக புவியிலிருந்து நிலவிற்கு மனிதர்களைக் கொண்டு செல்ல இதுவே பின்னர் பயன்படுத்தப்பட்டது. சிறு வயது முதலே வெர்னர் பிரான் விண்வெளியின் வியத்தகுக் காட்சிகளைக் காண்பதில் விருப்பம் கொண்டிருந்தார். அவரது தாயாரும் சிறு தொலைநோக்கி ஒன்றை மகனுக்கு அளித்து அவரது ஆர்வத்துக்கு ஊக்கம் அளித்தார். பின்னாளில் வெர்னர் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானியாக வளர்ந்தார்.

சோவியத் யூனியன் 1957 அக்டோபர் 4ஆம் நாள் ஸ்புட்னிக்-1 என்ற செயற்கைத் துணைக்கோளை வெற்றிகரமாக விண்வெளியில் செலுத்தியது. உலகம் முழுதும் இச்செயலை மிகுந்த ஆர்வத்துடன் கவனித்தது எனலாம். இச்செயற்கைத் துணைக்கோள் சிறியதொரு நிலவை ஒத்திருந்ததோடு, புவியை 90 நிமிடங்களில் சுற்றி வந்தது. புவியிலிருந்து பல நூறு மைல்களுக்கு அப்பால் இந்தச் செயற்கைத் துணைக்கோள் நிலை நிறுத்தப்பட்டது. அடுத்து 1958 ஜனவரி 31-ல் அமெரிக்கா எக்ஸ்ப்ளோரர்-1 என்ற தனது துணைக்கோளை விண்வெளியில் செலுத்தியது. அடுத்து வந்த சில ஆண்டுகளில் சோவியத் யூனியனும், அமெரிக்காவும் மாறி மாறி துணைக்கோள்களை விண்வெளியில் செலுத்தின. விண்வெளிக் கண்டுபிடிப்புகள் பலவற்றில் ஈடுபட்டு நிலவுக்குச் செல்லும் முயற்சியில் இரு நாடுகளும் ஈடுபட்டன.

சோவியத் யூனியன் ஸ்புட்னிக்-1ஐத் தொடர்ந்து மற்றொரு விண்வெளிக்கலமான ஸ்புட்னிக்-II-ஐச் செலுத்தியது. அதில் லைகா என்ற பெயர் கொண்ட பெண் நாய் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டது. ஒரு வாரம், பல இன்னல்கள் நிறைந்த விண்வெளிச் சூழ்நிலையில் அந்த நாய் இருந்து உயிர் வாழ்வதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. எனவே விண்வெளிக்குச் சென்று உயிருடன் திரும்பி வந்த முதலாவது உயிரினம் என்ற பெருமை லைகா என்ற அந்தப் பெண் நாய்க்குக் கிடைத்தது.

விண்வெளிப் பயணத்தின் திருப்பு முனையாக, 1969 ஜூலையில், மனிதன் நிலவில் காலடி எடுத்து வைத்ததைக் குறிப்பிடலாம். அமெரிக்கா அனுப்பிய விண்வெளிக்கலமான அப்பலோ-II, நெயில் ஆம்ஸ்ட்ராங்க், எட்வின் இ ஆல்ட்வின் ஆகிய இரு விண்வெளிப் பயணிகளுடன் 1969 ஜூலை 20-ல் நிலவில் சென்று இறங்கியது.

பின்னர் பல துணைக்கோள்கள் பல்வேறு நாடுகளால் விண்ணில் செலுத்தப்பட்டன. அவை புவியின் மேற்பரப்பில் அமைந்துள்ள பல்வேறு முக்கிய தகவல்களை ஒளிப்படங்களாக அனுப்பி வைத்தன. அப்படங்களின் அடிப்படையில்தான் உலகின் பல நாடுகளின் வரை படங்களில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டன. மேலும் வானொலி, தொலைக்காட்சி ஆகிய தகவல் தொடர்பு அமைப்புகளில் துணைக்கோள் தொழில்நுட்பம் பெரும் மாற்றங்களை விளைவித்தது. முக்கியமாக நான்கு வகையான துணைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன. அவை 1) கூர்ந்து நோக்கித் தகவல் திரட்டும் துணைக் கோள்கள், 2) தட்பவெப்பம் அறிவிக்கும் துணைக்கோள்கள், 3) தகவல் தொடர்புத் துணைக்கோள்கள், 4) பிறகோள்கள், விண்மீன்கள் பற்றிய தகவல்களைத் தந்து வழிகாட்டும் துணைக்கோள்கள் என்பனவாம்

புவியில் உள்ள பல இடங்களைப் பற்றிய சரியான தகவல்களையும், படங்களையும் அனுப்பி இதுவரை புரியாத புதிராக இருந்த பலவற்றிற்கு முதல் வகைத் துணைக்கோள்கள் விடையளித்தன. புவியிலுள்ள காடுகள், மலைகள், எரிமலைகள், கனிம வளங்கள், பனிப்பகுதிகள் ஆகியன பற்றிய பல விவரங்களை இவ்வகைத் துணைக்கோள்கள் அனுப்பி வைத்தன.

தட்பவெப்பத் துணைக்கோள்கள் அனுப்பும் தகவல்கள் வாயிலாகப் புயல், நிலநடுக்கம், பெருமழை, சூறாவளி பற்றிய தகவல்களை முன்கூட்டியே அறிய முடிவதுடன், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடிகிறது.

அடுத்த வகைத் துணைக்கோள்களால் தகவல் தொடர்பு அமைப்பில் பெரும் புரட்சியே விளைந்துள்ளது. ஒரே ஒரு துணைக்கோளின் வாயிலாக பல ஆயிரம் தொலை பேசிகளைச் செயற்படுத்த முடிகிறது. வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை உலகின் எந்த மூலையிலும் ஒலி/ஒளி பரப்பச் செய்ய முடியும். அடுத்து, சில சிறப்பு வகைத் துணைக்கோள்களைப் பயன்படுத்திப் பிற கோள்களின் விவரங்களைப் பெற இயலும்.