Pages

Thursday, August 25, 2011

மனித உடலை விட குளிர்ச்சியான நட்சத்திரங்கள் கண்டுபிடிப்பு


நாசாவின் நீண்ட தூர அகச்சிவப்பு ஆய்வு கண்டுபிடிப்பு விவரங்களை பயன்படுத்தி விஞ்ஞானிகள் குளிர்ச்சியான நிழல் நட்சத்திரங்களை கண்டுபிடித்து உள்ளனர்.

இந்த நட்சத்திரங்கள் மனித உடலை விட குளிர்ச்சித் தன்மை பொருந்தியதாக உள்ளன. விண்வெளி ஆய்வாளர்கள் இந்த நட்சத்திரங்களுக்கு ஒய் ட்வார்ப் என பெயர் சூட்டியுள்ளனர்.

கண்ணுக்கு தெரியக் கூடிய வெளிச்சத்தில் பார்க்கக்கூடிய தொலைநோக்கியை பயன்படுத்தி பார்த்த போது மங்கிய வெளிச்சத்தில் இருந்த 6 ஒய் ட்வார்ப் நட்சத்திரங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

இந்த நட்சத்திரங்கள் நமது சூரியனுக்கு அருகாமையில் 40 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளன. இந்த சிறிய நட்சத்திரங்கள் மற்றும் இதரப் பொருட்களுக்காக வைஸ் விவரங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டன.

அடர்த்தியான அகச்சிவப்பு கதிர் காரணமாக அவை மிக மங்கிய வெளிச்சத்துடன் காணப்பட்டன. பழுப்பு நிற சிறிய குடும்ப நட்சத்திர வரிசையில் ஒய் நட்சத்திரங்கள் மிக குளிர்ச்சியானவை. இதனை தவறிய நட்சத்திரங்கள் என கூறுவது உண்டு. இந்த ஆய்வு அறிக்கை கிர்க் பாட்ரிக் ஆய்வாளர் தலைமையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment