Pages

Tuesday, August 2, 2011

வியாழன்

சூரிய மண்டலத்தில் ஐந்தாவதாக அமைந்துள்ள கிரகம் வியாழன் (Jupiter). இது சூரியனிலிருந்து 778,900,000 கி.மீ. தொலைவில் உள்ளது. இது சூரியனை ஒருமுறை சுற்றிவர 12 ஆண்டுகள் ஆகிறது. தன்னைத் தானே ஒருமுறை சுற்றிக்கொள்ள 9 மணி 50 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறது. இது மிக வேகமாக சுழலும் கிரகம் ஆகும். சூரிய குடும்பத்திலேயே பெரிய கிரகமான இதற்கு அதிகபட்சமாக 63 துணைக்கிரகங்கள் உள்ளன. பூமியைப் போல் 11 மடங்கு சுற்றளவு கொண்டது. வியாழன் கிர

கத்திற்குள் 1321 பூமிகளை வைக்கலாம் அவ்வளவு பெரியது.

பூமியை விட இரண்டரை மடங்கு ஈர்ப்புவிசை இருப்பதால் அருகில் நெருங்கும் வால்நட்சத்திரங்கள், எரிநட்சத்திரங்கள் போன்றவற்றை இழுத்து தனது துணைக்கிரகமாக இயங்க வைக்கிறது. நைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்கள் வியாழனில் நிரம்பிக் காணப்படுகின்றன. வியாழனில் அவ்வப்போது பெரும் சூறாவளிகள் வீசிய வண்ணமே உள்ளன. வானில் நிலா மற்றும் வெள்ளிக்கு அடுத்தபடியாக பிரகாசமாக தெரியும் கிரகம் இதுவாகும். கி.பி. 1610 - ஆம் ஆண்டு கலிலியோ இதன் நான்கு துணைக்கிரகங்களைக் கண்டுபிடித்தார்.

No comments:

Post a Comment