Pages

Sunday, August 7, 2011

யுரேனஸ்

சூரிய மண்டலத்தின் ஏழாவது கோளாக அமைந்துள்ளது யுரேனஸ் (Uranes). இந்த கிரகம் 1781 - ஆம் ஆண்டு வில்லியம் ஹெர்ஷெல் என்பவரால் கண்டறியப்பட்டது. இது ஒருமுறை சூரியனைச் சுற்றிவர 84 ஆண்டுகள் ஆகிறது. இது தன்னைத் தானே ஒருமுறை சுற்ற 17 மணி 14 நிமிடங்கள் ஆகிறது. இதனைச் சுற்றி 11 வளையங்கள் உள்ளன. யுரேனஸ் ஒரு வாயு கோளம் ஆகும். இதில் ஹைட்ரஜன், ஹீலியம், மீத்தேன் போன்ற வாயுக்கள் உள்ளன. இதன் வெப்பநிலை -1970C ஆகும். இதுவரை 27 துணைக் கிரகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இன்னும் கண்டறியப்படாதவை பல இருக்கக்கூடும் என கருதப்படுகிறது.

No comments:

Post a Comment