Pages

Wednesday, August 17, 2011

பாகிஸ்தானுக்காக செய்மதி ஏவும் சீனா

பாகிஸ்தானின் விண்வெளித்துறைக்கு உதவும் வகையில் சீனா பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சீனா - பாகிஸ்தான் இடையே இரு தரப்பு

பரஸ்பரம் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் இவற்றை மேற்கொள்ளும் சீனா, முதன்முறையாக பாகிஸ்தானுக்காக தொலை தொடர்பு செயற்கை கோள் ஒன்றினை தயாரித்து விண்வெளிக்கு ஏவவிருக்கிறது.

PAKSAT-1 ஆர் என பெயரிடப்பட்டுள்ள குறித்த தொலை தொடர்பு செயற்கை கோள், 3பி டிரான்ஸ்பான்டர்கள் கொண்ட ராக்கெட்டை கொண்டுசெல்லவுள்ளது. இந்த செயற்கை கோள் மூலம் காலநிலை மாற்றம், அழுத்த தொலை தொடர்புகள் என்பவற்றை அறிந்து கொள்ள முடியும். மேலும் இராணுவ சேவைக்காகவும் பயன்படுத்தக்கூடிய நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்கை கோள் சீனாவின் தென்மேற்கு பகுதியில் ஜிசாங் செயற்கை கோள் ஏவு மையத்திலிருந்து விரைவில் விண்ணில் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது பாகிஸ்தான், சீனா நல்லுறவை வளர்த்தெடுப்பதற்கான நல்லதொரு அடையாளமாக இருக்கும் என சிச்சாங் செய்மதி ஏவும் மையத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment