Pages

Tuesday, August 2, 2011

செவ்வாய்


செவ்வாய் (Mars) கிரகம் சூரிய மண்டலத்தில் நான்காவதாக பூமிக்கு அடுத்ததாக அமைந்துள்ளது. இது சூரியனை சுற்றிவர 686.98 நாட்கள் ஆகிறது. சூரியனிலிருந்து 227,940,000 கி.மீ. தொலைவில் இது உள்ளது. தொலைநோக்கி மூலம் பார்க்கும்போது சிவப்பாக தெரிவதால் ஆங்கிலத்தில் The red planet என்று அழைக்கப்படுகிறது. அதுபோலவே தமிழில் செவ்வாய் என்று காரணப் பெயரில் அழைக்கப்படுகிறது. இதற்கு இரண்டு துணைக் கோள்கள் உள்ளன. இதன் வழிமண்டலம் முற்றிலும் மாறுபட்டது. இங்கு கார்பன்-டை-ஆக்சைட் 95.32%, நிட்ரோஜன் 27% உள்ளன. மற்ற வாயுக்கள் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளன. பிராணவாயு (ஆக்சிஜன்) 0.13 சதவீதமே உள்ளது. 1877 - இல் ஹால் என்பவர் இதன் துணைக்கிரகங்களைக் கண்டறிந்தார். அவை ஃபோபோஸ், டைமோஸ் என்பவை ஆகும்.

செவ்வாயில் ஒரு நாள் என்பது கொஞ்சம் அதிகம். அதாவது 24 மணி 39 நிமிடங்கள் 35 நொடிகளைக் கொண்டது. இங்கு பூமியில் ஏற்படுவதைவிட பெரிய தூசியாலான புயல்கள் ஏற்படுகின்றன. சில நேரங்களில் ஏற்படும் புயல் மொத்த கிரகத்திற்குமே பரவுகிறது. இதன் துருவப்பகுதிகள் பூமியில் உள்ளதைப் போலவே பனியால் மூடப்பட்டுள்ளது.





No comments:

Post a Comment