Pages

Wednesday, August 10, 2011

வால்நட்சத்திரம்

விண்வெளியில் பல ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சித் தருபவை வால்நட்சத்திரங்கள். வால்நட்சத்திரத்தை கிரேக்க மொழியில் கோமெட் (Kometes) என்று அழைத்தனர். அதுவே பின்பு காமெட் (Comet) என்றானது. ஒளி வீசும் விண்மீனில் நீண்டு வால் போல் காணப்படும் பகுதியே இப்பெயருக்கு காரணம். ஆரம்ப காலங்களில் நீண்ட பகுதி பனிக்கட்டியாலும், தூசியாலும் ஆனது என்று நம்பினர். தற்போது, அந்த நட்சத்திரம் வேகமாக பயணிக்கும்போது சூரிய வெப்பத்தால் அதிலிருக்கும் பனிக்கட்டி உருகி நீரும், தேவையற்ற பொருள்கள் எரிந்த புகையும் பின்தள்ளப்படுவதே வால்போன்ற தோற்றத்திற்குக் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

பொதுவாக வால்நட்சத்திரங்கள் ஒழுங்கற்ற அமைப்பை உடையவை. அவை சூரியனை நெருங்க நெருங்க வாலின் நீளமும் நீண்டு கொண்டே செல்லும். அதன் நீளம் பல லட்சம் கிலோமீட்டர் வரை இருக்கும். இவை தங்கள் சுற்றுப் பாதையில் சூரியனுக்கு அருகாமையில் வந்து பின்னர் மிக தொலைவில் சென்று மறைகின்றன.

No comments:

Post a Comment