Pages

Monday, August 8, 2011

நெப்ட்யூன்

நெப்ட்யூன் (Neptune) சூரிய மண்டலத்தின் எட்டாவது கோள். இதை 1846 - ஆம் ஆண்டு செப்டம்பர் 23 - ஆம் நாள் ஜாண் காட்ஃபிரிட் கேல் என்பவர் கண்டுபிடித்தார். இது சூரியனிலிருந்து பூமியைப் போல் 30 மடங்கு அதாவது 4,504,300,000 கி.மீ. தொலைவில் உள்ளது. இது சூரியனை 165 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுற்றிவருகிறது. 16 மணி 6.7 நிமிடங்களுக்கு ஒருமுறை சுற்றிக் கொள்கிறது. இதுவே சூரிய மண்டலத்தில் மிகதொலைவில் இருக்கும் வாயு ராட்சதன் ஆகும். இதற்கு எட்டு துணைக் கிரகங்கள் உள்ளன. இங்கு ஹைட்ரோஜன் (85%), ஹீலியம் (13%) ஆகிய வாயுக்கள் அதிக அளவிலும், மீத்தேன் (2%) குறைவான அளவிலும் காணப்படுகின்றன.

No comments:

Post a Comment