Pages

Monday, August 15, 2011

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றார், சுற்றுலா பயணி: வானவெளி வீரர்கள் கட்டிப்பிடித்து வரவேற்றனர்


ரஷியாவின் சோயுஸ் விண்கலம், நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு விண்வெளியில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துடன் இணைந்தது. அதில் இருந்த விண்வெளி சுற்றுலாபயணி சார்லஸ் சிமோனியும், 2 ரஷிய விண்வெளி வீரர்களும் விண்வெளி நிலையத்தில் நுழைந்தனர். அவர்களை ஏற்கனவே அங்கு இருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர்கள் கட்டி அணைத்து வரவேற்றனர். ரஷியாவின் சோயுஸ் விண்கலம், கஜகஸ்தான் நாட்டில் உள்ள பைகானூர் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. இதில் அமெரிக்காவை சேர்ந்த கம்ப்ïட்டர் நிபுணர் சுற்றுலா பயணியாக விண்ணுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறார். அவருடன் 2 ரஷிய விண்வெளி வீரர்கள் பியோடோர் ïர்சிக்கின், ஒலேக் கோடோவ் ஆகியோரும் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.

சோயுஸ் விண்கலம் 2 நாட்களுக்கு மேலாக பல ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு சென்றதும் அது சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை அடைந்தது. நேற்று முன்தினம் இரவு 12.40 மணிக்கு அது சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி கழகத்துடன் இணைந்தது.

கைதட்டி வரவேற்றனர்

அதன்பிறகு அவர்கள் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்குள் நுழைந்தனர். இதை தரைக்கட்டுப்பாடு நிலையத்தில் இருந்த அமெரிக்க-ரஷிய அதிகாரிகள் மற்றும் சிமோனியின் நண்பர் மார்தா ஸ்டுவர்ட் ஆகியோர் கைதட்டி வரவேற்றனர். மார்தா அவரை பார்த்து நீங்கள் இப்போது இந்த உலகத்தை விட்டு வெளியே போய்விட்டீர்கள் என்று கூறினார். மார்தா ஒரு பெண். வாழ்க்கைக்கலை குருவான அவரை சிமோனி திருமணம் செய்துகொள்வதாக இருந்தது.

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இருந்த அமெரிக்க விண்வெளி வீரர்கள் மைக்கேல் லேபஸ் அலெக்ரியா, சுனிதா வில்லியம்ஸ், ரஷிய விண்வெளி வீரர் மிக்கையில் டைïரின் ஆகியோர் அவர்களை கட்டி அணைத்து வரவேற்றனர்.

20-ந் தேதி பூமிக்கு திரும்புகிறார்

சிமோனி வருகிற 20-ந் தேதி பூமிக்கு திரும்புகிறார். அவருடன் ரஷிய விண்வெளி வீரர் டைïரின், அமெரிக்க வீரர் லோபஸ் அலெக்ரியா ஆகியோரும் பூமிக்கு திரும்புகிறார்கள். இவர்கள் 2 பேரும் கடந்த செப்டம்பர் மாதம் முதல் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் தங்கி இருக்கிறார்கள்.

சிமோனியுடன் விண்வெளிக்கு பறந்த ரஷிய விண்வெளி வீரர்கள் ïர்சிக்கின், கோடோவ் ஆகியோர் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் 6 மாதம் தங்கி இருப்பார்கள். இந்த 2 பேருடன் சுனிதா வில்லியம்சும் தங்கி இருப்பார்.


No comments:

Post a Comment