Pages

Wednesday, August 17, 2011

செய்மதி மூலம் விண்வெளிக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை

பூமியைச் சுற்றிலும் உள்ள விண்வெளிக் கழிவுகளை அகற்ற செய்மதி ஒன்றினை ஏவுவதற்கு விஞ்ஞானிகள் தீர்மானித்துள்ளனர்.

இத்திட்டம் இத்தாலிய விண்வெளி நிறுவனத்தின் ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டது. இவ்வாறு அனுப்பப்படும் கலத்தின் முன்பக்கத்தில் எரித்து அழிக்கும் ஒரு றொக்கற் தொகுதி காணப்படும்.

இது பூமியின் சூழலிலுள்ள பாரிய குப்பைகளை அழித்து, சர்வதேச விண்வெளி நிலையத்தினை அல்லது தொடர்பாடல் செய்மதிகளைத் தாக்குவதிலிருந்து காப்பாற்றும்.

53 வருடங்களிற்கு முன்னர் ஸ்பூட்னிக் ஐ ஏவப்பட்டதிலிருந்து மனித இனம் ஏராளமான குப்பைகளை விண்வெளியில் விட்டுவந்துள்ளது.

கைவிடப்பட்ட றொக்கற்றுகள், செய்மதிகள் மற்றும் ஏவுகணைத் துண்டுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து கிட்டத்தட்ட 370,000 துண்டுகளை உருவாக்கியிருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

மோதுகையினால் அல்லது கைவிடப்பட்ட விண்வெளிக்கலங்களின் துண்டுகள் சேர்ந்த 20,000 குப்பைகள் பூமியின் தாழ்சுற்றுவட்டப் பகுதியில் தற்போது காணப்படுவதாகக் கூறப்படுகின்றது.

இவற்றைச் சுத்தப்படுத்துவதற்கு இதுதான் சரியான நேரம். இனிமேலும் தாமதித்தால் இன்னும் இன்னும் அதிக குப்பைகளை அகற்றும் வேலைதான் அதிகரிக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

ஒவ்வொரு வருடமும் 5-10 பொருட்களையே இதனால் அகற்றமுடியுமெனத் தெரியவருகின்றது.

‘கெஸ்லர் சின்ட்றோம்’ எனும் குப்பைகள் உள்ள பகுதியையும் இச்செயற்பாடு அகற்றும்.

இத்திட்டம்பற்றி 30 வருடங்களுக்கு முன்னதாகவே நாசாவால் கருத்துக் கூறப்பட்டு வந்தது. இதனை விரைவாகத் தீர்ப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதற்கும் தூண்டிவருகின்றது.

2009 இல் இரிடியம் 33 செய்மதிக்கும் கொஸ்மோஸ் 2251 செய்மதிக்குமிடையில் மோசமான விபத்து ஒன்று இடம்பெற்றது.

இவை பூமியின் சுற்றுவட்டத்தில் விநாடிக்கு 3,000மீ. இற்கும் மேல் சென்ற தொலைத்தொடர்பு செய்மதிகள் இரண்டிற்கிடையில் இடம்பெற்ற முதலாவது பாரிய விபத்தாக இருந்தது.

No comments:

Post a Comment