Pages

Sunday, August 7, 2011

நமது பூமி கிரகத்திற்கு 2 சந்திரன்கள்: புதிய ஆய்வில் தகவல்

நமது பூமிக் கிரகம் பகலில் சூரியனின் தீவர வெளிச்சத்தையும், இரவில் மனதுக்கு இதமான மென்னையான வெளிச்சம் தரும் நிலாவையும் கொண்டு இருக்கிறது.

இந்த நிலா பூமியில் 2 ஆக இருந்தது என ஆய்வாளர்கள் புதிய கண்டுபிடிப்பில் தெரிவித்துள்ளனர். 2வது நிலா இப்போது தெரிவதில்லை. இரு கோள்களும் மிதமான வேகத்தில் மோதிக் கொண்டதை தொடர்ந்து 2வது நிலாவை உடன் வந்த சகோதர செயற்கை கோள் ஈர்த்துக் கொண்டு விட்டது.

இரண்டு நிலா மோதிக் கொண்டதை தொடர்ந்து அதன் பரப்பில் மலை போன்ற உயர் நிலங்கள் உருவாகி உள்ளன. ஈர்ப்பு சக்தி அலைகளால் நிலாவின் கூட்டுப் பகுதி ஏற்றத் தாழ்வுகளுடன் ஆகி விட்டன.

செவ்வாய்க்கிரக அளவில் உள்ள பொருள் சூரியக் குடும்பத்தின் துவக்க கட்டத்தில் மோதி துகள் வெளிப்பட்டன. அவை பின்னர் ஒன்று சேர்ந்து நிலாவாக உருவெடுத்தது என நிபுணர்கள் நம்புகிறார்கள்.

2வது நிலாவும் பெரும் மோதலில் உருவானது தான் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். விண்வெளி இயற்பியல் தத்துவப்படி பூமியை நோக்கிய 2 நிலாக்கள், மெதுவாக மோதிக் கொண்டன என நேச்சர் இதழில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment