Pages

Monday, August 1, 2011

வெள்ளி

சூரிய குடும்பத்தில் இரண்டாவதாக, புதனுக்கும் - பூமிக்கும் இடையில் அமைந்துள்ள கிரகம் வெள்ளி (Venus) ஆகும். இது சூரியனைச் சுற்றிவர 224.7 நாட்கள் எடுத்துக்கொள்கிறது. இதன் சுற்றுப்பாதையின் நீளம் 10.8 கோடி கி.மீ. ஆகும். இதற்கு துணைக் கோள்கள் இல்லை. காதல் மற்றும் அழகுக்கான ரோம தேவதையான வீனசின் பெயர் இதற்கு சூட்டப்பட்டது. இதன் விட்டம் 12,103.6 கி.மீ. ஆகும். இது அளவில் பூமியைவிட சிறிது குறைவாக இருப்பதால் பூமியின் சகோதரி என்று அழைக்கப்படுகிறது. இதன் மேற்பரப்பில் குறைந்த பட்சமாக -2200C வெப்பமும், அதிகபட்சமாக 4200C வெப்பமும் நிலவுகிறது. இங்கு பூமியை விட அதிக அளவில் எரிமலைகள் உள்ளன.

No comments:

Post a Comment