Pages

Thursday, August 18, 2011

விண்வெளியில் தங்கி இனி விடுமுறையைக் கழிக்க முடியும்.

பூமியிலிருந்து 217 மைல் மேலே ஒரு விடுதியைக் கட்டத் தீர்மானித்துள்ளது ரஷ்யா. இந்த விண்வெளி விடுதியில் தங்கி விடுமுறையைக் கழிக்க முடியும்.

இதில் நான்கு அறைகளில் 7 விருந்தினர் தங்கலாம். இவற்றின் சுவர்கள் விண்வெளியையும் கீழேயுள்ள பூமியையும் பார்க்கக்கூடியவாறு கண்ணாடியினால் ஆக்கப்பட்டுள்ளன. இதற்குச் செல்ல Soyuz றொக்கற்றில் 2 நாட்களைக் கழிக்கவேண்டியிருக்கும்.

ஆனால் இது பணத்திற்


கேற்ப செலவினைக் குறைக்கும் விடுமுறையல்ல. 5 நாள் தங்குவதற்கு 100,000 பவுண்களும் பயணத்திற்கு மொத்தமாக 50


0,000 பவுண்களும் செலவாகும்.

இந்த வர்த்தக விண்வெளி விடுதி 2016 இல் திறக்கப்படவுள்ளது. இது சர்வதேச விண்வெளி நிலையத்தின் விண்வெளி வீரர்களால் பயன்படுத்தப்படும் கலத்தைவிட இன்னும் வசதியானதாகும். விண்வெளியில் நிறையற்ற நிலை காணப்படுவதால் இவர்களது படுக்கைகள் செங்குத்தாகவோ கிடையாகவோ காணப்படும்.

அத்துடன் நீரை இங்கு பயன்படுத்த முடியாதென்பதால் குளிக்க முடியாது. அனுபவமிக்க விண்வெளி விமானிகளுடன் செல்லும் சுற்றுலாப் பயணிகள் பூமியில் தயாரிக்கப்பட்ட உணவையே சூடாக்கி உண்பர்.

வழமையாக விண்வெளி வீரர்களுக்குக் கொடுக்கப்படும் குழாய்களில் அடைக்கப்பட்ட, உலர்ந்த உணவுகளைக் கொடுக்காமல் காளான்கள், கடலைகள், உருளைக்கிழங்கு சூப் மற்றும் பிளம்ஸ்கள் என்பன பயணிகளுக்கு வழங்கப்படும்.


தேநீர், சுத்திகரிக்கப்பட்ட நீர், பழச்சாறுகள் அனைத்தும் கொடுக்கப்படும். ஆனால் குடிவகைகள் தடைசெய்யப்பட்டுள்ளன. மலசலகூடங்களில் நீருக்குப் பதிலாக வாயு பயன்படுத்தப்படும். கழிவுநீரும் சுத்திகரிக்கப்படும்.

அதேவேளை அறைக்குள் உள்ள காற்றும் மீளச் சுத்திகரிக்கப்பட்டுத் திரும்பவும் அறைக்குள் அனுப்பப்படும். புவிச்சுற்றுப்பாதைத் தொழில்நுட்ப நிறுவனமே இவ்விடுதியைக் கட்டப்போகின்றது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏதாவது நெருக்கடி வந்தால் அங்கிருந்து பூமிக்குச் செல்லாமல் இந்த விடுதியையே விண்வெளிக்கூடமாகவும் பயன்படுத்தப்படக்கூடிய வசதி இதில் காணப்படும்.


No comments:

Post a Comment