Pages

Tuesday, July 19, 2011

நாசாவின் விண்வெளி ஆராய்ச்சிக் குழுவில் மீண்டுமொரு இந்தியப்பெண்

பஞ்சாபை சேர்ந்த ஐஸ்தீப் கவுர் என்ற பெண் நாசாவின் செவ்வாய்கிரக விண்வெளி ஆராய்ச்சி குழுவில் இடம் பெற்றுள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா செவ்வாய்கிரகத்தை பற்றி ஆராய்ச்சி நடத்துவதற்கு ஒரு குழுவை அமைத்துள்ளது.

அக்குழுவில் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பெண்ணான ஜஸ்தீப் கவுர் (27) என்பவர் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளார். இவர் விண்வெளி யில் ஆராயும் குழுவினரின் உடல் நிலையை கண்காணிக்கும் பணி யில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரின் தந்தை ஹர்பஜன்சிங். ஹோமியோபதி மருத்துவர்.தாய் ரவீந்தர் கவுர் இவர் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் பணிபுரிகிறார். பல் மருத்துவராக பணிபுரிந்து வரும் ஜஸ்தீப் கவுர் தனது பள்ளிக்கல்வியை மங்களூரில் முடித்தார்.

அப்போது பல் சம்பந்தமாக அமெரிக்க நிறுவனம் ஒன்று நடத்திய போட்டியில் இவர் சிறந்த மாணவியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் மருத்துவ கல்வியை லூதியானாவில் முடித்தார்.

அதனைதொடர்ந்து பெல்ஜியம் நாட்டில் இரண்டு பட்ட மேற்படிப்புகளை முடித் துள்ளார். தற்போது விண்வெளி வீரர்களின் பல் மற்றும் அவர்களின் தாடை சம்பந்தமான துறையில் ஆராய்ச் சியை மேற்கொண்ட வருகிறார்.

இவரின் ஆராய்ச்சி குறித்து ஐரோப்பிய விண்வெளி நாசாவுக்கு பரிந்துரைத் துள்ளது. அதனடிப்படையில் பல்வேறு நேர்முகத்தேர்வு மற்றும் பரிசோதனைக்கு பின்னர் விண்வெளி செல்லும் குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஜஸ் தீப் கவுர் மூன்றுக்கும் மேற்பட்ட மருத்துவ சம்பந்தமான புத்தகங்களை எழுதியுள்ளார். சர்வதேச பல் ஆய்வு அமைப்பின் தலைவராகவும் இருந்துள்ளார்.

ஜஸ்தீப் விண் வெளிக்கு தேர்ந்தெடுத்தது குறித்து அவரின் பெற்றோர் குறிப்பிடுகையில் ஜஸ்தீப் கவுரின் கனவு நிறைவேறியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நாசா விண்வெளி ஆராய்ச்சியில் இதே பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மறைந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கல்பனா சாவ்லா இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்க
து

No comments:

Post a Comment