Pages

Sunday, July 24, 2011

விண்மீன்களின் பரிணாம வளர்ச்சி.....

மனிதர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் எப்படி பிறப்பு, வாழக்கை மற்றும் இறப்பு என்று ஒரு பரிணாமம் உள்ளதோ, அதே போல விண் மீன்களுக்கும் கூட ஒரு பரிணாம வளர்ச்சி உள்ளது. இதை விண்மீனின் பரிணாம வளர்ச்சி என்கின்றனர். இந்த பரிணாம வளர்ச்சியின் இறுதி கட்டங்களில் தான் ஒரு விண்மீன் சிவப்பு பெருஉருவாக மாறுகிறது.

ஒரு விண்மீனின் மய்யப் பகுதியில் நடைபெறும் அணுக்கரு வினைகள் என்பவை தான் விண்மீனின் ஆற்றலுக்குக் காரணம். அதாவது ஹைட்ரஜனின் அணுக்கருக்கள் இணைந்து ஹீலியமாக மாறுகின்றன.

இந்த ஹீலியம் மெதுவாக விண்மீனின் மய்யப்பகுதியில் அப்படியே சேகரமாகி, ஒரு ஹீலியம் மய்யப்பகுதியை உருவாக்குகிறது. ஹீலியம் மய்யப்பகுதியில் சேகரமாகும் போது அதனைச் சுற்றியுள்ள வெளி சுற்றுப் பரப்பில் ஹைட்ரஜன் இணைவு வினைகள் நடக்கின்றன.

காலப்போக்கில் இந்த மய்யப்பகுதி மிகவும் கனமானதாகவும், மிகவும் அழுத்தமானதாகவும் மாறுகிறது. (ஹீலியம் என்பது ஹைட்ரஜனை விடவும் கனமானதாகும்) மையப் பகுதியின் அழுத்தமும் கனமும் அதன் வெப்ப நிலையை முன்பு இருந்ததை விடவும் அதிகமாக மாற்றுகின்றன.

காலப்போக்கில் ஹீலியம் அணுக்கருவே இணைந்து மற்ற கணமான தனிம அணுக்களை உருவாக்குமளவுக்கு விண்மீனின் மய்யப்பகுதியில் வெப்பநிலையும் அழுத்தமும் அதிகமாகிறது.

ஹீலியம் அணுக்கருக்கள் கார்பன் மற்றும் ஆக்ஸிஜன் போன்ற கனமான அணுக்களாக இணையும் போது அபரிமிதமான வெப்ப ஆற்றல் விண்மீனினி மையப்பகுதியில் உருவாக்குகிறது.

இந்த ஹீலிய இணைவு வினைகளால் வெளிப்படும் வெப்ப ஆற்றல் விண்மீனின் சுயஈர்ப்பு விசையை சமநிலைப்படுத்தத் தேவையான ஆற்றலை விட மிகவும் அதிகமாக உள்ளதால், விண்மீன் மெதுவாக விரிவடையத் தொடங்குகிறது.

No comments:

Post a Comment