Pages

Tuesday, July 26, 2011

நட்சத்திரம்

இரவு வானத்தில் சிறு புள்ளிகளாக மின்னுபவை நட்சத்திரங்கள் (Stars) அல்லது விண்மீன்கள் எனப்படுகின்றன. சில நட்சத்திரங்கள் (விண்மீன்கள்) சூரியனின் அளவில் ஐந்தில் ஒரு பகுதியே இருக்கின்றன. ஆனால், சில நம் சூரியனைவிட 1000 மடங்கு பெரிதாக இருக்கின்றன. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு குறிப்பிட்ட ஆயுள் உண்டு. பெரிய நட்சத்திரங்களுக்கு குறுகிய ஆயுளும், சிறிய நட்சத்திரங்களுக்கு நீண்ட ஆயுளும் உள்ளன. அண்டவெளியில் 70 கோடி கோடி கோடி (70,000,000,000,000,000,000,000) நட்சத்திரங்கள் இருக்கலாம் என நம்பப்படுகிறது.

நட்சத்திரங்கள் ஹைட்ரஜனால் உருவானவை. ஒரு பெரிய விளையாட்டு மைதானம் அளவு ஹைட்ரஜனை அழுத்தி ஒரு கிரிக்கெட் பந்து அளவிற்கு ஆக்கினால் எப்படி இருக்குமோ, அதுதான் ஒரு நட்சத்திரம். நட்சத்திரத்தில் இருக்கும் ஹைட்ரஜன் ஒன்றின் மீது மற்றொன்று இணைந்து ஹீலியம் ஆகிறது. ஹீலியம் ஒன்றில் ஒன்று இணைந்து கார்பன் ஆகிறது. கார்பனுக்கு பின் நியான், ஆக்ஸிஜன், சிலிகான் போன்றவை உருவாகின்றன. இறுதியில் இரும்பு உருவாகிறது. அப்போது நட்சத்திரம் இறக்கும் தருவாயை அடைகிறது.

No comments:

Post a Comment