Pages

Thursday, July 28, 2011

சூரியன்

சூரியன் (Sun), பூமி அமைந்திருக்கும் சூரிய மண்டலத்தின் மையத்தில் அமைந்துள்ள விண்மீன் ஆகும். இதுவே சூரிய மண்டலத்தில் அமைந்துள்ள அனைத்து கோள்களும் பிற பொருள்களும் இயங்கத் தேவையான ஆதார சக்தியாக விளங்குகிறது. சூரியன், சூரிய மண்டலத்தின் மொத்த நிறையில் 98.6 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது. சூரியனின் மொத்த ஆயுள் சுமார் 1000 கோடி ஆண்டுகள் ஆகும். அதில் 470 கோடி ஆண்டுகள் தற்போது முடிவடைந்துள்ளன.

சூரியன் 1,392,000 கி.மீ. விட்டம் உடையது. சூரியனுக்குள் பத்துலட்சம் பூமியை வைக்கலாம் அவ்வளவு பெரியது. இது பூமியில் இருந்து சுமார் 149,600,000 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சூரியனில் பெருமளவில் ஐதரசன் (74% நிறை) மற்றும் ஹீலியம் (24% நிறை) ஆகியவற்றையும், சிறிய அளவில் பிற தனிமங்களான, இரும்பு, நிக்கல், ஆக்ஸிஜன், சிலிக்கான், கந்தகம், மக்னீசியம், கரிமம், நியான், கால்சியம், குரோமியம் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

நமது விண்மீன் மண்டலமான பால்வீதியின் உள் வட்டத்தில் அமைந்துள்ள ஓரியன் வளைவில் சூரியன் அமைந்துள்ளது. நமது சூரியன் அமைந்துள்ள ஓரியன் வளைவுக்கும், அருகில் உள்ள பெர்சியஸ் வளைவுக்கும் இடையே உள்ள தொலைவு சுமார் 6,500 ஒளியாண்டுகள் (பால் வீதி) சுற்றி வர சுமார் 225 - 250 மில்லியன் வருடங்கள் ஆகலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment