Pages

Wednesday, July 27, 2011

கருந்துளைகள்

எல்லையற்ற பிரபஞ்சத்தை அழிக்கும் சக்திவாய்ந்தவை கருந்துளைகள். பிரபஞ்சத்தில் காணப்படும் இந்த விநோத பொருள் பற்றிய மர்மங்களை விஞ்ஞானிகளால் விடுவிக்க முடியவில்லை. மிகப்பெரிய பிரமாண்டமான நட்சத்திரங்கள் திடீரென தனித்தனியாகச் சுருங்கியதன் விளைவாக கருந்துளைகள் உருவாயின. அவற்றுள் காணப்படும் நிறையீர்ப்புச் சக்தியின் காரணமாக ஒளி வெளியேற்றப்படுவதில்லை. நட்சத்திரங்களின் மேற்பரப்பைக் காட்டிலும் கருந்துளைக்குள் என்ன நடக்கிறது என்பது புரியாத புதிராக உள்ளது.

இவை மிக வழவழப்பான பொருளாக இருக்க வேண்டும். இவற்றின் நிறையீர்ப்பு சக்தியின் காரணமாக எந்த கதிர்வீச்சும் வெளிவர இயலாது. இவற்றிடம் மாட்டிக் கொண்ட பொருட்கள் கூட வெளியே வர இயலாது. இவற்றை பிளக்கவோ, அழிக்கவோ, சுருக்கவோ இயலாது. இவை வளர்ந்து கொண்டே செல்லும். இவற்றின் வளர்ச்சியைக் கூட தடுக்க இயலாது. இவை விண்மீன்களோடு ஜோடி சேர்ந்து சுற்றி வருகின்றன. நட்சத்திரங்களின் வாயுக்களைக் கவர்ந்து இழுத்து அந்த நட்சத்திரங்களையே விழுங்கி விடுகின்றன. அவ்வாறு விழுங்கும்போது வெப்பமடைந்து X கதிர்கள் வெளியிடப்படுகின்றன. இந்த வாயுக்களின் சத்தங்களைக் கொண்டுதான் கருந்துளைகள் இருப்பதைக் கண்டறிய முடியும்.

செயற்கை துணைக்கோள்களில் அனுப்பட்ட X கதிர் தொலைநோக்கி8000 ஒளியாண்டு தொலைவில் செறிவுமிக்க X கதிர் வெளியானதைக் கொண்டு கருந்துளை காணப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. சைக்எக்ஸ்எனப் பெயரிடப்பட்ட இந்த கருந்துளை சூரியனை விட 3 மடங்கு பெரியது. HDE -226868 என்ற நட்சத்திரத்துடன் ஜோடி சேர்ந்திருந்தது.

இதனையடுத்து Dr. ஜோசப் வெபர் பால்வீதியை ஆராயும்போது பால்வீதியின் நடுவில் செறிவுமிக்க X கதிர் வருவதைக் கொண்டு கருந்துளைகள் இருப்பதைக் கண்டறிந்தார். இதனை மற்ற விஞ்ஞானிகளும் ஏற்றுக் கொண்டனர்.

இதுவரை பிரபஞ்சத்தில் 10000 ல் 1 பங்கு பகுதியை கருந்துளைகள் விழுங்கி விட்டன, இந்நிலை தொடர்ந்து நடைபெற்றால் ஒரு நாள் பிரபஞ்சத்திலுள்ள எல்லா பொருட்களும் கருந்துளைகளால் அழிக்கப்பட்டுவிடும்.

No comments:

Post a Comment