Pages

Wednesday, July 27, 2011

சூப்பர் நோவா

நட்சத்திரங்கள் சக்தி குறைந்து சுருங்கும்போது அதன் சுழலும் வேகம் அதிகரிக்கும். சில நட்சத்திரங்கள் மணிக்கு பத்து மில்லியன் மைல் வேகத்தில் சுழலுகின்றன. உட்புறத்திலுள்ள அழுத்தமும் மேல்புறத்திலுள்ள வேகமும் அதை வெடிக்கச் செய்கின்றன. அது ஒரு பில்லியன் நட்சத்திரங்களுக்கு ஒப்பான பேரொளியை வீசி வெடிக்கிறது. சில சமயங்களில் அது தனது சொந்த அண்டம் முழுவதையும்விட மிகப் பிரகாசமடைகிறது. அதனுடைய வாயுக்கள் சீறி வெளிப்பட்டு அண்டப்புற வெளியில் பரவுகின்றன. இதுவே, சூப்பர் நோவா ஆகும்.

முதன் முதலாக சீன வான ஆராய்ச்சியாளர்களால் கி.பி. 1054 - ஆம் ஆண்டு சூப்பர் நோவா (super Nova) கண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர்1572 - இல் டைக்கோ சூப்பர் நோவாவை கண்டு பதிவு செய்தார். அது பட்டப்பகலிலும் எளிதில் தெரிந்தது. அதன் பிறகு 1604 - இல் கெப்ளர் சூப்பர் நோவாவைக் கண்டுப்பிடித்து கூறினார்.

No comments:

Post a Comment