Pages

Thursday, July 28, 2011

சந்திரன்

சூரிய மண்டலத்தில் சூரியனைச் சுற்றிவரும் கோள்களுள் மூன்றாவது இடத்தில் இருப்பது பூமி. இந்த பூமியின் ஒரே துணைக்கோளாக விளங்குவது சந்திரன் (நிலா). இது குறிப்பிட்ட கால அளவில் பூமியைச் சுற்றி வருகிறது. அதற்கு எடுத்துக் கொள்ளும் காலம் 27 1/3 நாள்கள். சந்திரன் தன் சுற்றுப்பாதையில் பூமியைச் சுற்றி வரும்போது மிக அருகாமையில் 356,395 கி.மீ. தொலைவிலும், விலகிச் செல்லும்

போது 406,767 கி.மீ. தொலைவிலும் இருக்கிறது.

சந்திரன் (Moon) சுயமாக ஒளிரும் தன்மை அற்றது. அது சூரியனிலிருந்து வரும் ஒளியைப் பெற்று பூமிக்கு அளிக்கிறது. சந்திரனின் விட்டம் 3,480 கி.மீ. ஆகும். சந்திரன் தன் சுற்றுப்பாதையில் சுற்றிவரும் போது அமாவாசையும், பௌர்ணமியும் ஏற்படுகின்றன. அதேபோல், சந்திரனின் வட்டப்பாதையில் ஏற்படும் சில மாறுதல்களினால் சந்திரகிரகணமும், சூரியகிரகணமும் ஏற்படுகின்றன.

சந்திரனின் ஈர்ப்புவிசை பூமியின் ஈர்ப்பு விசையில் ஆறில் ஒரு பங்கையே கொண்டுள்ளது. அதேபோல் சந்திரனில் காற்றுமண்டலம் இல்லை. இதுபோன்ற காரணங்களால் சந்திரனில் மனிதர்கள் வாழ இயலாது. இது நிலவு, திங்கள், அம்புலி போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது.

No comments:

Post a Comment