Pages

Wednesday, July 20, 2011

அமாவாசை நாளில் சந்திரன் ஏன் தெரிவதில்லை?

தினமும் வரும் நிலா அமாவாசையில் மட்டும் ஏன் தெரிவதில்லை? காரணம், சந்திரன் தன்னைத் தானே ஒருமுறை சுற்றி வர 29 1/2 நாட்கள் ஆகுது. அது தன்னைத் தானே சுற்றிக்கொண்டு பூமியையும் சுற்ற...இதே 29 1/2நாட்கள்தான் ஆகுது.

பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றி வர 24 மணி நேரம் ஆகுது. அது தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்ற 365 1/4 நாட்கள் ஆகுது.

இப்படியே சந்திரன் பூமியைச் சுற்ற, பூமி சூரியனைச் சுற்ற... இப்படியே ஒன்றுக்கொன்று மாறி மாறி சுற்றி வருவதால்தான் மாதத்தில் ஒருநாள் நாம் சந்திரனையே பார்க்க முடியாமல் போய் விடுகிறது. அமாவாசை தினத்தன்று சூரியனுக்கும், பூமிக்கும் இடையில் சந்திரன் வந்து விடும். அப்போது புவியை நோக்கி இருக்கும் சந்திரனின் மேற்பரப்பில் சூரிய ஒளி விழுவதில்லை. அதனால் தான் அமாவாசைக்கு மட்டும் சந்திரன் நம் கண்ணுக்கே தெரிவதில்லை.


No comments:

Post a Comment